உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை... காவலுக்கு நின்ற தெருநாய்கள்; மேற்கு வங்கத்தில் ஆச்சர்யம்

கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை... காவலுக்கு நின்ற தெருநாய்கள்; மேற்கு வங்கத்தில் ஆச்சர்யம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை நடுத்தெருவில் கைவிடப்பட்டது. நள்ளிரவு முழுதும் குழந்தையை சுற்றி தெருநாய்கள் காவலுக்கு நிற்பதைப் போல, சுற்றி நின்றுள்ளன. இது நேரில் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது; நாடியா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே தொழிலாளர் குடியிருப்பு காலனியில் உள்ள கழிவறை முன்பு துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது. அதனை சுற்றியும் தெருநாய்கள் காவலுக்கு நிற்பது போல் நின்று கொண்டிருந்தன. இதனைக் கண்டு பதறிப்போனோம். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மீட்கப்பட்ட குழந்தை, மகேஷ்கஞ்ச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கிருஷ்ணாநகர் சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் காணப்பட்ட ரத்தம் பிரசிவித்த போது உண்டானது என்று கூறினர், இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தை நல அதிகாரிகளிடம் மீட்கப்பட்ட குழந்தை ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே குழந்தையை விட்டுச்சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். குழந்தையைக் கைவிட்டவரை அடையாளம் காண்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி