உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம் வயதினரையும் பாதிக்கும் பக்கவாதம்: மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி

இளம் வயதினரையும் பாதிக்கும் பக்கவாதம்: மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வயதானவர்களை அதிகம் தாக்கி வந்த பக்கவாதத்தால், தற்போது இளம் வயதினரை குறிப்பாக டீன் ஏஜ் வயதில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்த குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது, மூளையில் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதனை தான் பக்கவாதம் என்கிறோம். இதனால், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தனர்.தற்போது, இந்த பக்கவாதத்தால், இளம் வயதினரும் அதிகம் பாதிக்கப்படுவது டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 வயதுக்கு உட்பட்டவர்களில் 100ல் 2 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒராண்டில் 21 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் 300 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 77 பேர் சிகிச்சை பெற்றனர்.இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்ததில், அதிக ரத்த அழுத்தம் அவர்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளது. 260 பேரை ஆய்வு செய்ததில் 65 சதவீதம் பேருக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம், புகைபிடித்தல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதை 85 சதவீதம் தடுக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

இளந்திரையன், வேலந்தாவளம்
ஜன 17, 2024 10:07

இரத்த நாளத்தில் படிந்திருக்கும் கொழுப்பு பக்கவாதம் மற்றும் இதய பாதிப்பு, பாற்வை குறைபாடு கு மூலகாரணம்.... நமது சித்தர்கள் அஷ்ட சூரணம் என்ற அருமருந்து தந்திருக்கிராற்கள்... நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்


Karuthu kirukkan
ஜன 17, 2024 07:28

இது பக்கவாத காலம் ...


Ramesh Sargam
ஜன 17, 2024 00:22

2019 -ஆம் ஆண்டு அந்த கொடிய வைரஸ் covid-19 வந்தபிறகு, பொதுவாக வேலைக்கு செல்பவர்கள், குறிப்பாக IT நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டோடு வேலை என்று வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெளியில் சென்று ஒரு சிறு நடைப்பயிற்சி கூட செய்வதில்லை. நன்றாக உணவு உட்கொண்டு, கடின வேலை எதுவும் செய்யாமல், மிகவும் உடம்பு எடை கூடுவதால், பக்க வாதம் மட்டும் இல்லை, எல்லாவித வாதமும் வரும். சாப்பிட கூப்பிட்டால் கூட, I am on a call, Do not disturb me என்று எரிந்து விழுகிறார்கள் அவர்கள் தாய்தந்தையர்கள் மீது. அப்படி எறிந்துவிழுவதும் ஒருவித வாதம்தான். அது புரிவதில்லை அவர்களுக்கு. அவர்களை அந்த ஈஸ்வரன்தான் காப்பாற்றவேண்டும். அவர்கள் பெற்றோரையும்.


g.s,rajan
ஜன 16, 2024 23:35

அமிர்த காலம் ....


Barakat Ali
ஜன 16, 2024 21:17

கலிகாலம் .......


மேலும் செய்திகள்





புதிய வீடியோ