வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீதிமன்றங்களை, நீதிபதிகளை, வழக்கறிஞர்களை இனி யார் மதிப்பார்கள் அவர்கள் இதுபோன்ற ஒரு மோசமான செயலில் ஈடுபட்டால்.
காஷியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத் கோர்ட்டில், நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட விவாதத்தில், இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்டு தீ போல பரவியது.இதனை தொடர்ந்து நீதிபதி தங்கியுள்ள வளாகத்திற்குள், வழக்கறிஞர்கள் பலர் புகுந்ததால், போலீசார் தடியடி நடத்தி வழக்கறிஞர்களை வெளியேற்றினர்.இது குறித்து போலீசார் கூறுகையில், நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டதும், நாங்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனே சென்று வழக்கறிஞர்களை வெளியேற்றிவிட்டோம். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.லேசான தடியடி நடத்தியதில், சில வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டது.இந்நிலையில் பார் கவுன்சில் அமைப்பு தலையிட்டு, சம்பவம் குறித்து விசாரிக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.இதனிடையே கோர்ட் வளாகத்திற்கு வெளியே, பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக,வழக்கறிஞர்கள் அடையாள போராட்டங்களில் ஈடுபட்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.
நீதிமன்றங்களை, நீதிபதிகளை, வழக்கறிஞர்களை இனி யார் மதிப்பார்கள் அவர்கள் இதுபோன்ற ஒரு மோசமான செயலில் ஈடுபட்டால்.