உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆனாலும் வெளியே வர முடியாது!

கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆனாலும் வெளியே வர முடியாது!

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கஸ்டடி வரும் 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கெஜ்ரிவால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சி.பி.ஐ., காவல்

டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், பிறகு அவரை சி.பி.ஐ., அதிகாரிகளும் கைது செய்தனர். தற்போது அவர், சிபிஐ காவலில் உள்ளார்.

விசாரணை

இதனை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு பிறப்பித்த உத்தரவு: 90 நாட்களுக்கு மேல் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமினில் அவர் வெளியில் வருவதற்கும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஜாமின் கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம். வெறும் விசாரணைக்காக மட்டும் ஒருவரை கைது செய்து சிறையில் வைத்து இருப்பதை அனுமதிக்க முடியாது.

உரிமை

கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

பெரிய அமர்வு

மேலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19ன் படி கைது செய்யப்பட்டது தவறானது என கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தின் பெரிய அமர்வு விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

பதவி விலகுவாரா?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை பதவி விலகும்படியோ அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ செயல்படக்கூடாது என நீதிமன்றம் சொல்ல முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றனர். சிபிஐ தரப்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமின் கிடைக்காமல் கெஜ்ரிவால் வெளியே வர முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 12, 2024 20:44

குஜிலிவால் ஒரு இலாகா இல்லாத முதலமைச்சர் என்று இந்த நீதிபதிகளுக்கு தெரியுமா? வரலாற்றிலேயே தனது பொறுப்பில் ஒரு துறை கூட வைத்துக்கொள்ளாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கும் முதலமைச்சர் யார் என்றால் இந்த கேஜ்ரிவால்தான்.


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2024 17:27

நீதிமன்ற நீதிபதிகளின் ஆய்வு செய்த அறிவு பூர்வமான தீர்ப்பு எப்படி இருக்கும் ஒரு அரசியல் வியாதி இதை செய்தால். ஒருவன் இன்னொருவனை கத்தியால் சுத்தி கொன்றான் 1 தீர்ப்பு 1 - அரசியல் வியாதி அல்லது பெட்டி கொடுக்கும் இடத்தில் இருக்கும் பணக்காரன் என்றால் இப்படி இருக்கும் அந்த தீர்ப்பு "கத்தியால் அவன் இறந்தது உண்மை. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால் அவன் கையில் கத்தி இருந்தது உண்மை தள்ளுமுள்ளுவில் அவன் கத்தி மேலே விழுந்து அது குத்தி இறந்து விட்டான். ஆகவே கத்தி வைத்திருந்தவன் தவறு அல்ல அது அவனை விடுதலை செய்கின்றேன். எப்போது இந்த தீர்ப்பு வரும். பெட்டி சரியாக கொடுக்கப்பட்ட இரண்டு நாட்களில் அதாவது 20 வருடம் கழித்து. 2 அதுவே சாதாரணன் என்னும் பட்சத்தில் "கத்தியை வைத்திருந்தது. என்ன தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இப்படி கத்தியால் குத்தியது காப்பு அதுவும் உயிர்போகுமாறு குத்தியது தவறு. ஆகவே மரணதண்டனை விதிக்கின்றேன் - கைது செய்ததிலிருந்து 15 நாளில் தீர்ப்பு வரும் இப்படி இது தான் இந்திய நீதிமன்றம் / நீதிபதிகள்


Azad
ஜூலை 12, 2024 17:07

விசாரணைனா எப்படி ஆதாரம் அற்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கிற ஆதாரத்தை நீ குடு எப்படி கொடுப்பீங்க கைது பண்ண கூட்றவாளிகள் எல்லாத்தையும் கமிஷன் கொடுத்தானு சொல்லி விட்டுட்டீங்க தேர்தல் பத்திரம் மூலமா பணம் வாங்கிக்கொண்டு விடுதலை பண்ணி வைத்து வெளி சுத்திட்டு இருக்குற ஃபிராடு பிஜேபி கவர்மெண்ட் கையால் ஆகாத பிராடு பசங்க ஏவிஎம் திருடி கள்ளத்தனம் பண்ணி ஜெயிச்சு வரவங்களுக்கு மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவன எப்படி பாதுகாக்க தெரியும் மதிக்க தெரியுமா பிஜேபி என்றாலே ஒட்டுமொத்த அயோக்கியத்தனம் பிராடு கூட்டம் இவர்கள் நடத்துற அரசாங்கம் எப்படி இருக்கும்? ..டி எச்ஐடி யார் இது


Balasubramanian
ஜூலை 12, 2024 15:36

முதல்வர் அல்லது அமைச்சர் 24 மணி நேரமும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பது சட்டம். சிறையில் அடைக்கப் பட்டு அமலாக்க துறை சட்டப் படி கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர இயலாத ஒருவர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை மட்டும் சிறையில் இருந்து எவ்வாறு செய்ய முடியும்?


ganapathy
ஜூலை 12, 2024 14:33

இவன் இனி நமக்கும் எவனக்கும் ஒரு பொருட்டல்ல... இவனது அரசியல் வாழ்க்கை இனி தொடராது...இவனோட கூட்டணிவைக்க எந்த கேனப்பய முன் வருவான்...காங்கிரஸ் தவிர...


Sri
ஜூலை 12, 2024 13:51

அனால் ஒட்டு போட்ட மக்களுக்கு மட்டும் எதுவும் நடக்காது, நீதியும் கிடைக்காது.


Partha
ஜூலை 12, 2024 13:28

Kejiriwalukey இந்த நிலைமைந, என் தலைவன் ஸ்டாலினுக்கு ?


Chandrasekaran Sriram
ஜூலை 12, 2024 13:22

ஏதோ வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியில் வருவது போல ஒரு மாயையை உண்டாக்க துடிக்கிறார்கள் இந்த ஊழல் வாதிகள் . வழக்கம் போல உச்ச நீதிமன்றம் சந்தேகக்குறிய தீர்ப்பை வழங்கி ருக்கிறது


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 12, 2024 13:20

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அதனால் ஜாமீன். அப்படியே மனீஷ் சிசோடியாவுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமச்சரானதால் ஒரு ஜாமீன் பார்சல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் உள்ள ஏகப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு ஜாமீன் பார்சல் போட்டுடலாம். இருக்கிறவனுக்கே நீதிமன்றம் இருக்கு.


Ramona
ஜூலை 12, 2024 12:08

ஒரு உண்மையான காந்தியின் வாரிசு, நாட்டுக்குகாக தன்னையும் தன் குடும்பத்தையும்,தியாகம் செய்து வெரும் கஞ்சி குடித்து பல லட்சம் செலவு செய்து கட்டிய அரண்மனையில் தனது மனைவியுடன் கஞ்சி கூட குடிக்க முடியவில்லையே,இப்போது உநீம க்கு கடும் கோபம் வரும் பிறகு இவர் டெல்லியில் முதலமைச்சர் ஆகி மக்கள் பிரச்சனையை அதிரடியாக போக்கும் காலம் வரப்போகிறது..


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2024 17:39

பல லட்சம் அல்ல பல கோடி அதாவது ரூ 45 கோடி


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி