உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு; கோவில்கள் பட்டியலை தர உத்தரவு

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு; கோவில்கள் பட்டியலை தர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- டில்லி சிறப்பு நிருபர் -தமிழகத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எவை; உட்படாத கோவில்கள் எவை என்பது தொடர்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=72xmhlk1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.மேலும், முறையாக அர்ச்சகருக்கு படித்த நபர்களை தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், உறுப்பினர் நியமனத்தில் தமிழக அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே கருத்து முரண்ஏற்பட்டது.'சர்ச்சைக்குரிய நபர்களை அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம்' என, தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலய சுவாமிகளை உறுப்பினராக நியமிக்க உத்தரவிடுகிறோம். அந்த கமிட்டியின் மூலம், தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, பின்பற்றாமல் பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும். அந்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2026 ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

D.Ambujavalli
செப் 27, 2025 18:46

தமிழகத்திலுள்ள மொத்த கோயில்களிலும் அறநிலையத்துறையால் கணக்கீடு செய்து ஆகம விதிக்குட்பட்டவை, விதிக்கு அப்பாற்பட்டவை என்று வகைப்படுத்திப் பட்டியலிட 3 மாதமா ஆகும்? இதையே சாக்காக வைத்து தேர்தல் அறிவிப்புவரை ஒட்டிவிட்டு, அடுத்து பதவியில் அமர்ந்தபின் கேசையே சுத்தமாக முடிவிடும் சாத்தியமே அதிகமாகத் தெரிகிறது.


என்றும் இந்தியன்
செப் 27, 2025 18:26

திருட்டு மூடர்கள் கயவர்கள் கீழ் கோவில் மட்டும் தான் வரவேண்டுமா என் சர்ச் மசூதிகள் / கிறித்துவ முஸ்லீம் மதத்தலங்கள் ஏன் வரக்கூடாது. அரசின் கீழ் வெறும் இந்து கோவில் மட்டும் வருவதில் என்ன நியாயம். டாஸ்மாக்கினாட்டில் வசிக்கும் எல்லா மத கோவில்களும் அரசின் கீழ் வரவேண்டும் இல்லையென்றால் எதுவுமே அவர்கள் கீழ் வரக்கூடாது. இது தான் சட்டமாக இருக்க வேண்டும்


தமிழ்வேள்
செப் 27, 2025 16:49

இனக்குழு தெய்வ கோவில்கள் ,சிறு தெய்வ கோவில்கள் , போன்றவை மட்டுமே ஆகமம் இல்லா கோவில்கள் என்ற ரகத்தில் வரும். அவற்றில் அந்தணர் பூஜகர் ஆக இருக்கும் கோவில்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் .மேலும் வருமானம் அற்ற கோவில்கள் மட்டுமே . அவற்றில் அந்தணர் இல்லாத , பிற இந பூசகர்கள் உள்ளதால் , அவற்றில் புதிய திராவிட கிரிப்டோ பூசாரி பயிற்சிபெற்றவர்களை நியமித்தால் சாதி தகராறு வரும் ...அது திமுகவின் ஓட்டுவங்கியை ஏடாகூடமாக பதம்பார்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் , திமுக அரசு , இந்த மாதிரி ஒரு லிஸ்ட் கொடுத்து , சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லவே இல்லை .


Murugan Guruswamy
செப் 27, 2025 16:41

ஆமாம், பெரும்பாலான கோவில்கள் 98% விகிதம் தமிழ் மன்னர்கள் காட்டியதுதான், விஜயநகர் எந்த புதிய கோவில்களை யும் கட்ட வில்லை தமிழ் நாட்டில், கோவில்களை முழுமையாக அப கரிக்க ஒரு கும்பல், செஞ்சி கோட்டை மற்றும் திருவண்ணாமலை கோவில்களை மராட்டியர் கட்டியது என்றும், சோழர்களை தெலுங்கர்கள் என்றும் பொய்யான வரலாற்றை நிறுவ முயல்கிறது, இது தொடர்ந்தால் கோவில் மீட்பு போராட்டம் நடத்த படும், அப்பறம் பிராமணர்கள் கோவில் பக்கமே வர முடியாது, விஜய நகர் ஒரு கோவில் கூட கட்ட வில்லை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை புனரமைப்பு என்ற பெயரில் கேவலமாக்கியதுதான் மிச்சம். பொய்யான போலியான வரலாற்றை நிறுவ முயல வேண்டாம், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஒன்றிய அரசு கூட உங்களுக்கு ஆதரவாக வராது, இப்பொது அந்த தைரியம் தானே உங்களுக்கு


Sivaram
செப் 27, 2025 15:00

பெரம்பூர் பாபு வேட்டியை மடிச்சு கட்டுனார்னா கோர்ட்டாவது , கண்டிப்பாவது எல்லாமே அவ்வளோதான் ஜாக்கிரதை


Chandru
செப் 27, 2025 14:30

எனக்கு ஒரு சந்தேகம் வாசகர்களே. இந்த திகழ் ஓவியன் அய்யா இதுவரை எவ்வளவு 200 ருபாய் தாள்களை 2021 க்கு பிறகு வாங்கி இருப்பர்?


பெரிய ராசு
செப் 27, 2025 16:57

இவனுக்கு முன்னமே 456 கேஸு சரக்கு மற்றும் 23லச்சம் அட்வான்ஸ் கொடுத்தாச்சு சும்மா ராப்பகலாக கூவுவான் அடிமை ..


Natchimuthu Chithiraisamy
செப் 27, 2025 14:08

தயவு செய்து கோவில்களை வெளிநாட்டு தூண்டுதல்களால் அழிக்காதீர்கள். கட்சி ஆரம்பித்து சாப்பிட்டதில் இந்து சோறும் இருக்கும். இந்துவாகிய எங்களுக்கு நடிக்க தெரியாத தலைமை இல்லாததினால் மதம் மாறிகளாகிய சிலர் வெளிநாட்டு பணத்தை வைத்து கூட்டம் கூட்டி வெற்றி பெற்று கோவிலை அழிப்பது ஸ்கூல் tc ல் இந்து என்கிற பெயரை நீக்குவது கிருஸ்துவ IAS நியமித்தால் வெளிநாட்டில் சொல்லும் வேலை தானாக நடக்கிறது. ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி சீமான் விஜய் என்று கோவிலை அழிக்க பலர் உள்ளனர். முருகன் மலையை பங்கு போடும் நாள் கூட வரலாம்


தமிழ்வேள்
செப் 27, 2025 14:08

இன்று ஒரு புதிய கோவிலை கட்டினால்கூட , ஏதேனும் ஒரு ஆகமத்தின்படி மட்டுமே அமைக்கவும் ,குடமுழுக்கு செய்யவும் தினசரி பூஜா கர்மங்களை மேற்கொள்ளவும் முடியும் ..அப்படி இருக்க ஆகமம் இல்லாத கோவில் , என்ற ஒன்று கிடையவே கிடையாது .....கருணாநிதி ஆகமம் , அண்ணாதுரை ஆகமம் என்று திராவிட ஆகமங்களை யாராவது வகுத்தால் அதன்படி மேற்படியான்களுக்கு சமாதிகளை மாற்றி கட்டலாம் ..


Nanchilguru
செப் 27, 2025 13:12

இனி இன்டர்போல் மட்டும் தான் கண்டிக்க வேண்டியிருக்கு


Ramesh Sargam
செப் 27, 2025 12:11

2026 இல் திமுக தோல்வி பெரும். வேறு ஒரு கட்சி ஆட்சி அமைக்கும். அவர்களுக்கு மீண்டும் ஒரு ஆறுமாதம் நேரம் ஒதுக்கும் நீதிமன்றம். இப்படியே சிந்துபாத் தொடர் மாதிரி வழக்கு செல்லும்.


திகழ்ஓவியன்
செப் 27, 2025 12:59

2021 ஸ்டாலின் வெற்றி பெற கூடாது என்று நங்கநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் பாவ யாகம் காலையில் இருந்து மாலை வரை 200 டின் நெய் வார்த்து என்ன ஆச்சு , அப்ப கூட உம்மால் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்று சொல்ல முடியவில்லை , வேறு ஒரு கட்சி சிரிப்பு தான் 2026 ELECTION IS CAKE WALK TO DMK


Field Marshal
செப் 27, 2025 13:40

நங்கநல்லூரில் எந்த கோவிலில் யாகம் நடந்தது ?


முக்கிய வீடியோ