உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், செந்தில்பாலாஜிக்கு குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் மூலம் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார் . எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எப்போது உருவாகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் செய்யப்பட்ட ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

G.Subramanian
ஆக 07, 2024 15:38

இன்று போய் நாளை வாராய் என்று இராமாயணத்தில் கேட்டதாக ஞாபகம் . ஆனால் இது அதை வட மோஷமாக தெரிகிறது இன்ற ராக்கம்மா நாளை கடன் என்று கடையில் வைக்கும் போர்டு போல் உள்ளது


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 06, 2024 23:34

காசு இருக்கு என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேசு போடலாமா?. நீதித்துறையை கேலி செய்கிறான் உவர் ஆனார்.


Ramesh Sargam
ஆக 06, 2024 21:44

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறதோ என்று தோன்றுகிறது. நீதிமன்றம் எதற்காக கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடவேண்டும் என்று ஒருசிலர் கேள்வி கேட்பார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி கட்டளையிட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது. நேற்று தமிழகத்தின் ஒரு பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் உள்லேயே குண்டுவெடிப்பு ஏட்பட்டிருக்கிறது. காவலத்துறையினருக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு தேவை. அதேபோல் நீதிமன்றத்துக்கும் தேவை. அரசின் கட்டளைகளை மீறினால் நாளை நீதிமன்ற வளாகத்தினுள் கூட குண்டுவைப்பார்கள். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் உட்பட்டு ஒரு பயத்தில் பணிபுரிகிறார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தலைவிரித்து ஆடுகிறது.


Ramesh Sargam
ஆக 06, 2024 19:50

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறதோ என்று தோன்றுகிறது. நீதிமன்றம் எதற்காக கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடவேண்டும் என்று ஒருசிலர் கேள்வி கேட்பார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி கட்டளையிட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது. நேற்று தமிழகத்தின் ஒரு பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் உள்லேயே குண்டுவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. காவல் துறையினருக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு தேவை. அதேபோல் நீதிமன்றத்துக்கும் தேவை. அரசின் கட்டளைகளை மீறினால் நாளை நீதிமன்ற வளாகத்தினுள் கூட குண்டு வைப்பார்கள். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரிவோர் நீதிபதிகள் உட்பட ஒருவித பயத்தில் பணிபுரிகிறார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தலைவிரித்து ஆடுகிறது.


Sn RAAJA
ஆக 07, 2024 03:10

ஹா ஹாஹா நல்ல காமெடி. சுப்ரீம் கோர்ட்ட தமிழ் நாடு கட்டு படுத்துதா ? இந்தியாவிலேயே பாதுக்காபான நகரம் தமிழ் நாடுதான்.


M Ramachandran
ஆக 06, 2024 19:41

செந்தில் பாலாஜி ஐயா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். தீ மு க்கா கோபல புரா கஜானா இப்போ புழலில். அடுத்த கஜானா யாரு.


Nagarajan D
ஆக 06, 2024 19:06

இவனுக்கு எத்தனை வாய்ப்பு? நீதியற்ற நீதித்துறை... எல்லா மக்களுக்கும் இத்தனை முறை ஜாமீன் முறையீடுகள் உள்ளதா? வாரத்திற்கு ஒரு ஜாமீன் தாக்கல் செய்றான் அதையும் விசாரிக்கிறது நீதிமன்றங்கள்... இவன் யோக்கியனா இல்லையே பிறகு எதற்கு சட்டம் தூங்கி கொண்டிருக்கிறது? பிக் பாக்கெட் அடிப்பவனிடமும் ஹெல்மெட் போடாமல் செல்பவனிடமும் காட்டும் கண்டிப்பு ஏன் இவனிடம் காட்டப்படவில்லை... பிக் பாக்கெட் அடிப்பதும் ஹெல்மெட் போடாமல் செல்வதை இரண்டுமே குற்றம் என்றால் இந்த இழி பிறவி செய்தது என்ன புனித பணியா? இப்படி சட்டம் தூங்குவதால் தான் கட்ட பஞ்சாயத்துகள் நடக்கிறது....


sundarsvpr
ஆக 06, 2024 18:32

ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு காவல்துறை செந்தில் பாலாஜி சகோதரனை தேடி பிடிக்கும் வரை ஜாமீன் இல்லை என்று நீதிமன்றம் ஏன் கூறக்கூடாது? காவல்துறைக்கு உள்நோக்கம் உள்ளது நீதிமன்றம் சந்தேகப்படாத வரை செந்தில் பாலாஜி சிறையில் கவுரவ விருந்தாளிதான். தமிழ்நாட்டு வரவு செலவு திட்டத்தில் பாலாஜி பெயருக்கு நீதி ஒதுக்க வேண்டும். மாற்று அரசு வரும் வரை நிதி ஒதுக்கப்படும்.


rsudarsan lic
ஆக 06, 2024 18:23

நல்லா விளையாடறீங்க. நல்லா பொழுது போகுது. திடீர்னு ஒருநாள் பாலாஜி தவிர்த்து வேற யாராவது ஆப் ஆயிட போறீங்க. மறுபடியும் முதல்ல இருந்து


metturaan
ஆக 06, 2024 18:05

அட போங்கைய்யா... இவர் ஜெயில் ல இருக்கிறதும் வெளியே இருக்கிறதும் ஒன்னுதான் ற மாதிரி இவர் சொல்லி கோவை மேயர் நியமனம் என்று ஊடகங்கள் சொல்கிறது தெரிகிறது... சாமானியன் ஜெயிலுக்கு போனா நொந்து நூலாக்கறாங்க.. அரசியல் வாதிகளுக்கு அப்படி இல்லாத மாதிரி தோனுது என்ன சட்டமோ..


Chandrasekaran Balasubramaniam
ஆக 06, 2024 17:37

பெரிய முதலைகள் திருட்டு கழகத்தில் இருக்கிறான்கள். அவனுகளை ஏன் அ துறைக்கு தெரியல.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை