உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தான்: இடைத்தேர்தலில் பா.ஜ., அமைச்சர் தோல்வி: காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தான்: இடைத்தேர்தலில் பா.ஜ., அமைச்சர் தோல்வி: காங்கிரஸ் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரன்பூர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ., அரசில் அமைச்சராக இருக்கும் சுரேந்திர பால்சிங் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்., வேட்பாளர் ருபிந்தர் கூனர் வெற்றி பெற்றார்.சமீபத்தில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் குர்மீத் சிங் காலமானார். இதனால் இந்த தொகுதிக்கு மட்டும் ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை. இந்நிலையில் ராஜஸ்தானில் கரன்பூர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 5ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் போட்டியிட்டார். இவர் பா.ஜ., அமைச்சரை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் குன்னார் 12 ஆயிரத்து 750 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ramesh Sargam
ஜன 09, 2024 00:23

அப்பா இறந்ததால் பரிதாப அலை, வேற ஒன்றும் இல்லை.


ராஜ்
ஜன 08, 2024 22:55

சரி விடுங்க, அடி வாங்குனது ஆறு மணி நேரம், அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியா போயிடும்ன்னு சொல்ற மாதிரி, இது ஒரு ஆறுதலாக இருந்துட்டு போகட்டும்.


vadivelu
ஜன 09, 2024 07:06

ஜஸ்டின் ஆல்பர்ட், முகமத் வேலன் ஐயங்காரின் கருத்தை யாராவது ஏற்று உச்ச நீதி மன்றத்தில் இன்னொரு வழக்கை பதிவு செய்யட்டும்


Velan Iyengaar
ஜன 08, 2024 21:03

EVM மீதான புகார்களுக்கு பெரும் முகாந்திரம் சேர்க்கும் முடிவு தேர்தல் கமிஷன் ஒரு கேடுகெட்ட கமிஷனாக மாரி காலம் ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன


NicoleThomson
ஜன 08, 2024 21:40

அது எப்படிங்க உடன்பிறப்புகள் மாத்திரம் டேக்கினாலஜியில் , விசுவல் மீடியாவில் என்று எல்லா இடத்திலும் கலக்குறீங்க ?


Priyan Vadanad
ஜன 08, 2024 21:41

சுப்ரிம் கோர்ட் வழக்காடிகள் EVM.க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தோல்வி மட்டும் நிச்சயம்.


Rajesh
ஜன 08, 2024 22:20

போலி Iyengaar உன் வேஷம் கலைஞ்சுருச்சு .....200 Rs உறுதி


Bye Pass
ஜன 08, 2024 22:37

அவர் ஓ போடமாட்டார் ...


sankar
ஜன 08, 2024 20:54

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி இப்ப பேசட்டும் - இந்த புள்ளிராசாக்கள்


ramesh
ஜன 08, 2024 22:31

புள்ளி ராசாவா வார்த்தையை கவனமாக பேசுங்கள் .புள்ளி ராசா அர்த்தம் தெரிந்து கருது போடுங்கள் சங்கர்


Duruvesan
ஜன 08, 2024 20:34

பிஜேபிக்கு MP Raj ல வசுந்தரா சிவராஜ் சிங் ஆப்பு அடிப்பாங்க


Duruvesan
ஜன 08, 2024 20:32

ஆக மூர்கன் அறிவு முட்டில, தெலுங்கான ல ஜெயிச்சா ஓகே evm,


sankar
ஜன 08, 2024 19:20

அனுதாப வாக்குகள்


ஆரூர் ரங்
ஜன 08, 2024 18:37

இதே தொகுதி முன்பும் காங்கிரஸ் வசமே இருந்தது. அதுவும் அங்கு இவருடைய தந்தையே எம்எல்ஏ வாக இருந்தவர். முடிவில் வியப்பில்லை. காங்கிரஸ் க்கு லாபமும் இல்லை.( ஒரு கூடுதல் காண்டின் டோக்கன் ????தவிர)


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 19:39

சாரி நாங்கள் bye poll இல் எல்லாம் EVM உபயோகப்படுத்த மாட்டோம் , winning secret will not reveled


ramesh
ஜன 08, 2024 20:12

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்துக்குள் பிஜேபி க்கு விழுந்த முதல் பலத்த அடி


வெகுளி
ஜன 08, 2024 18:09

பா.ஜ. வாக்கு .... ஜனநாயகத்துக்கு வெற்றி... வெற்றி....


ramesh
ஜன 08, 2024 20:14

பிஜேபி தோல்வி ,ஜன நாயகத்தின் வெற்றி என்பதே சரி


Rajathi Rajan
ஜன 08, 2024 18:02

அயோத்தி பிஸி இல் இதை மறந்துடாங்க போல....


மேலும் செய்திகள்