உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்வாதி மாலிவால் விவகாரம்: முதல்வரின் தனிச்செயலர் மீது எப்.ஐ.ஆர்.

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: முதல்வரின் தனிச்செயலர் மீது எப்.ஐ.ஆர்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் முதல்வர் உதவியாளர் பிபவ் குமார் மீது போலீசார் எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால். இவர் கடந்தசில நாட்களுக்கு முன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது.இதையடுத்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஸ்வாதி மாலிவால், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார், தன்னைத் தாக்கியதாக புகார் மனு அளித்தார். நடவடிக்கை இல்லை.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் அரசு மீது கடுமையான விமர்சனம் செய்தனர்.இது உண்மையில் மிகவும் தீவிரமானதையடுத்து முதல்வரின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தான் தாக்கப்பட்டது குறித்து ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் விளக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
மே 17, 2024 11:03

கிரிமினலுக்குத் துணை போகும்போது இது போன்ற விளைவுகளை எதிர்பார்த்திருக்க மாட்டார். துடைப்பக்கட்சி மகளிரணி இனி காலி.


Rao
மே 17, 2024 08:53

why is this double standard.


Indhuindian
மே 17, 2024 05:58

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்


Kasimani Baskaran
மே 17, 2024 05:32

இராட்ஜ்ஜிய சபா உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யச்சொன்னால் எப்படி கேட்பார் சொன்னதை கேட்கவில்லை என்றவுடன் உடனே அடிக்கச்சொல்லி விட்டார் கெஜ்ரிவால் அதாவது அவரே அடித்தால் ஜாமீன் நிபந்தனையை மீறியதாகி விடும் என்பதால் உதவியாளரை வைத்து அடிக்க வைத்து இருக்கிறார் கொலை செய்யவில்லையே என்று நீதிமன்றம் பாராட்டவில்லையே என்று சந்தோசப்பட வேண்டும்


C.SRIRAM
மே 16, 2024 23:28

தனி செயலரா ? அடியாள் மாதிரி இருக்கிறார் அது சரி ஒரு பெண்ணை தாக்கியிருக்கிறார் எப்ஐஆர் மட்டும் போதாது கிரிமினல் வழக்கும் உடனடியாக பதிவுசெய்யப்படவேண்டும் சட்டம் அரசியல்வியாதிகளிடம் பம்முமோ ? சாதாரணமக்களிடம் மட்டும் தனது வீரத்தை காட்டும் போலும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ