புதுடில்லி: ‛‛ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நாம் நடத்த வேண்டும். மாறாக ராணுவ பலத்தை வெளிக்காட்டினால் பதற்றம் அதிகரிக்கும் '' எனக்கூறி அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள மணிசங்கர் அய்யர், அந்நாடு வெடிகுண்டு வீச முடிவு செய்தால் என்னவாகும் எனவும் கேட்டுள்ளார்.சர்ச்சை
காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சையாக பேசி கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா, வாரிசு வரி குறித்து பேசி பரபரப்பை உண்டாக்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vjto83jv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை காங்., தலைமை சமாளிப்பதற்குள், இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போலவும் உள்ளனர் எனக்கூறி அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து சாம் பிட்ரோடா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.,வும் அதன் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியையும், ராகுலையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அணு ஆயுதம்
இந்நிலையில், பாகிஸ்தானை மதிக்காவிட்டால், அந்நாடு நம் மீது வெடிகுண்டு வீசும் எனப் பேசி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் அடுத்த சர்ச்சையை துவக்கி வைத்து உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும். அந்த நாட்டிடம் அணுகுண்டு உள்ளது. அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்தக்கூடும். அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால்,நமது ராணுவ வலிமையை நாம் ஆதரிக்கிறோம். இது பதற்றத்தை மட்டுமே அதிகரிக்கும். பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன. நம்மிடமும் அணுகுண்டுகள் இருக்கின்றன. ஆனால், ஒரு பைத்தியகார மனிதன் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டு வீச தீர்மானித்தால் நிலைமை என்னவாகும்? அந்தப் பைத்தியக்கார மனிதன் லாகூரில் வெடிகுண்டு வீச முடிவு செய்தால், அதன் கதிரியக்கம் அமிர்தசரசை அடைய 8 வினாடிகள் போதும். நாம் அவர்களை மதித்தால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், நாம் அவர்களைப் புறக்கணித்தால் அணுகுண்டுகளை இந்தியாவில் வீச முடிவு செய்தால் என்ன ஆகும். இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.கண்டனம்
இந்த பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த தேர்தலில் ராகுலின் காங்கிரஸ் கட்சியின் கொள்கை வெளிப்படையாக தெரியவருகிறது. சியாச்சினை வழங்கி பாகிஸ்தானை உள்ளேயேயும், வெளியேயும் ஆதரிப்பது.யாசின் மாலிக், எஸ்டிபிஐ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய நபர்களுக்கு உள்ளேயேயும் வெளியேயும் ஆதரவு தருவது, பரவலாக ஊழல் செய்வது , ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது, முஸ்லிம் சமுதாயத்தை சமரசப்படுத்துதல் சீன கம்யூனிச கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது,மக்களை பிரிப்பது, பொய் சொல்வது, போலி வாக்குறுதி அளித்து ஏழைகளை தவறாக வழிநடத்துவது ஆகியன காங்., கொள்கைகள் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காங்., விளக்கம்
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛ பிரதமரின் அன்றாட அர்த்தமற்ற பேச்சுகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜ., இன்று மணிசங்கர் அய்யரின் பழைய பேட்டி ஒன்றை மீண்டும் கிளப்பி உள்ளது. மணிசங்கர் அய்யரின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி நிற்கிறது. அதை முற்றிலும் நிராகரிக்கிறது. அவர் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்காக பேசுவது இல்லை''. எனக்கூறியுள்ளார்.மணி சங்கர் விளக்கம்
தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து மணிசங்கர் அய்யர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ. அந்த வீடியோவில் நான் அணிந்திருக்கும் ஆடையில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. அது இப்போது மீண்டும் பகிரப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.