உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் திரும்ப பெற்றது தமிழக அரசு!

டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் திரும்ப பெற்றது தமிழக அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.சென்னையில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், கொள்முதல், விற்பனை போன்றவற்றின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=00tf1les&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல் 08) விசாரணைக்கு வந்தது.அப்போது,'டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்து விட்டது. டாஸ்மாக் விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

venugopal, S
ஏப் 08, 2025 20:26

இதைவிட கேவலம் எதுவும் வேண்டாமே. கெட் அவுட் அண்டு கெட் லாஸ்ட் சார்


chinnamanibalan
ஏப் 08, 2025 18:57

மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் என்பது தமிழ்ப் பழமொழி. டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை எனில், பிரச்சனையை அரசு துணிந்து எதிர் கொண்டு இருக்கலாமே. முட்டிய பின்னர் குனியத் தேவை இல்லை.


sankaranarayanan
ஏப் 08, 2025 18:36

ஆர்.எஸ்.பாரதி. வில்சன் இவர்களாலேயே கட்சிக்கு களங்கம் வரப்போகிறது எடுத்தற்கெல்லாம் நீதி மன்றம் செல்லும் பழக்கத்தை முதலில் மாற்ற வேண்டும் பொதுமக்கள் பணம் நீதி மன்றத்திலும் தெரிந்தும் தெரியாமலும் லட்சக்கணக்கில் விரயம் ஆகின்றது


M Ramachandran
ஏப் 08, 2025 18:30

மூஞ்சியில் விளக்கெண்ணெ வழிகின்றது. ஈ வே ரா சார்பில் வீரமணி தன் இடுப்பு துண்டை எடுத்து துடைப்பரா?


M S RAGHUNATHAN
ஏப் 08, 2025 18:30

உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை என்று மனு கொண்டு வந்த தமிழக அரசை மயிலிறகால் வருடி கொடுத்து இருக்கிறது உச்ச நீதி மன்றம். இது வெட்கப் படவேண்டிய விஷயம். Exemplary fine should have been imposed on TN Government for attributing motives on the entire HC judiciary. It is also an insult on the SC, since all the judges in HC are appointed by SC collegium. It is laughable that SC has taken it lightly. Contrast this attitude of SC with its handling of TN governor matter. How did the SC had come to the conclusion that the act/S of the governor is/ are illegal. This is a very strong indictment. What will be the reaction of SC, if the governors in various states in future choose to send the bills passed by state government with which they do not agree. Or if the governors did not act within a month as specified, the State Governments could take that the bills are deemed to have been passed. In the same vein, if the President fails to clear the bills referred to her within a month, can it be construed that the President has deemed to have given concurrence.


ஆரூர் ரங்
ஏப் 08, 2025 18:27

இன்னும்கூட ஊழல் ஸ்டாலின் பதவியில் நீடிப்பது அசிங்கம். குட்டு அவ்வளவு பலம்.


Kasimani Baskaran
ஏப் 08, 2025 18:21

ஐநா சபை வரை சென்று, கூட செ.பா வை பாதுகாப்பது அவசியம்...


B MAADHAVAN
ஏப் 08, 2025 18:14

சமீபத்தில் நீதிபதி வர்மா வீட்டில் எரிந்த நிலையில் கட்டு கட்டாணா பண நோட்டுகள், அந்த நீதிபதியின் நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல் உள்ளது. எனவே, நீதிபதிகளை பற்றி உயர்வான எண்ணம் நம் நாட்டு மக்களிடம் மட்டுமல்ல. உலக அளவில் உயர்ந்த நிலையில் பேசக் கூடியவைகளாக இருக்க வேண்டும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். நடுவு நிலைமை தவறாமல் நீதி தவறாமல், யாருக்கும் அஞ்சாமல், நம் நாட்டிற்கு பெருமையும், நியாயத்திற்கு புகழையும் சேர்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.


M S RAGHUNATHAN
ஏப் 08, 2025 17:52

I read a news item in TOI today. The crux is this. The collegium for ing judges to High Courts and Supreme court lamented about 50% of the persons involved for appointment have very poor judicial knowledge. Indirectly it means, the judges in district judiciary and to some extent in HCs are not qualified to be presiding officers of Courts. What is the remedy for this ? It is also inferred that those who were interviewed had strong personal views which may result in their judgements. It is time, an All India Judicial Service examination on the lines of UPSC is introduced and judges are ed through that. Collegium way should be scrapped.


Ray
ஏப் 09, 2025 01:30

All India Judicial Service examination should not be on the lines of NEET which has a dubious global record.


Gopal
ஏப் 08, 2025 17:36

ஒரு பொறுப்பற்ற வழக்கறிஞர்கள் குழுவை வைத்து கொண்டு ஒரே சொதப்பல் வழக்கு பதிவு செய்வதில். சரியான சட்ட அறிவு உள்ள லாயர்களை வைக்க வக்கு இல்லை.


சமீபத்திய செய்தி