உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யை விட தமிழகம் நிலைமை மோசம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங்கிரஸ்!

உ.பி.,யை விட தமிழகம் நிலைமை மோசம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங்கிரஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழக நிலைமை மோசமாகியுள்ளது. கடன் தொகை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.திருப்பூரில் நிருபர்களிடம் திமுக எம்பி கனிமொழி, 'அதிமுக ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது; இப்போது, ​​திமுக தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது' என்று கூறியிருந்தார்.இதனை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில், பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம். 2010ம் ஆண்டில், உ.பி., தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, ​​உ.பி.,யை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது.வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.இவர், ஏற்கனவே தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேச்சு நடத்தியவர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் இரு கட்சிகளும் உள்ளன. இத்தகைய நிலையில், நடிகர் விஜய்யுடன், அதுவும் ராகுலுக்கு நெருக்கமானதாக கருதப்படும் பிரவீன் பேச்சு நடத்தியது சர்ச்சையை கிளப்பியது.இப்போது அதே பிரவீன் மீண்டும் திமுகவினரை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMESH KUMAR R V
டிச 28, 2025 17:41

நாட்டு நடப்பு


Thravisham
டிச 28, 2025 17:35

அப்ப சூப்பர் சொம்பு பெருந்தொகை கதி? விசை பெருந்தொகையை மதிக்கக்கூட மாட்டாரே அடித்த காண்ட்ராக்ட் கொள்ளையை ஊழல்மிகு முதல் கும்பல் பிடுங்கிடுமே


Haja Kuthubdeen
டிச 28, 2025 16:39

காங்கிரஸ் இன்னும் எப்படி எதுவேணுமானாலும் சொண்ணாலும் திமுக துடைத்து கொள்ளும் நிலமைதான்....இதில் எங்க கூட்டணி பலமா ஒத்துமையா இருக்கோம்னு பில்டப்...திமுகவிற்கும் தெரியும் கூட்டணி இல்லன்னா அம்பேல்னு...


duruvasar
டிச 28, 2025 16:39

உண்மையை சொன்னால் அது சீண்டலா கோபால்.


krishna
டிச 28, 2025 16:33

SIR NEENGA VERA POYYILE PIRANDHU POYYILE VALARNDHA YIHAR RANI URUTTUVADHU SAADHAARANAM.AAMAM UNGA THALA PAPPU PAPPY URUTTADHA URUTTA.DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBALUKKU IPPADI SOLLA ARUGADHAI ILLAI.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி