உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பஸ் கவிழ்ந்து தமிழக அய்யப்ப பக்தர் பலி

கேரளாவில் பஸ் கவிழ்ந்து தமிழக அய்யப்ப பக்தர் பலி

கோட்டயம்: கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள சென்ற தமிழக பக்தர்களின் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார்; 10க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.கேரளாவில் மகரஜோதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, சமீபத்தில் திறக்கப்பட்டது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய அதிகளவில் வருகின்றனர்.இந்நிலையில் நேற்று தமிழகத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 22 பேருடன், சபரிமலைக்கு பஸ் சென்றது. இது, கோட்டயம் மாவட்டத்தின் முண்டக்காயம் அருகே சென்றபோது, சாலையின் வளைவில் வேகமாக திரும்பியது.அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், இதில் ஒருவர் பலியானார்; 10 பேர் காயமடைந்தனர்.அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்புக்குழுவினர் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா செல்வராஜ், 40, என்பவர் இறந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை