உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி

பஹல்காம் சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுங்கள்; ஓவைசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ''இன்னொரு பஹல்காம் சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்'' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது நமது பாதுகாப்புப் படையினர் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களை நான் வரவேற்கிறேன்.இன்னொரு பஹல்காம் சம்பவம் ஒருபோதும் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பின் தலைமையிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்!. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

India our pride
மே 07, 2025 12:22

நம்ப முடியாது. உள் இருந்தே கொல்லும் கான்செர்.


Indhuindian
மே 07, 2025 10:20

அப்படியே உள்ளூர்ல இருக்கற தீவிரவாதிகளையும் அவங்களை ஆதரிக்கறவங்களையும் அடைக்கலம் குடுக்கறவங்களையும் தீத்து கட்டுங்க


Kulandai kannan
மே 07, 2025 10:02

உங்க ஆட்கள் ஒழுங்காக இருந்தால், பாகிஸ்தான் எப்படி வாலாட்டும்?


abdulrahim
மே 07, 2025 11:05

இந்த வாய் கொழுப்புதான் வேணாங்குறது ....


GMM
மே 07, 2025 09:54

ஓவைஸி போல் இஸ்லாம் மக்கள் பயங்கர வாதம் எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஸ்டாலின், மம்தா, ராகுல் ஊக்க படுத்தும் குரல் இன்னும் ஒலிக்க வில்லை. ஏன்? முன்பு ஓவைஸி மாறுபட்ட கருத்து கூறி இருந்தாலும், ஆபத்தில் உதவும் நண்பராக மாறிவிட்டார். உழைத்து வாழ விரும்பாத பாகிஸ்தானை உலகம் இனி தனிமை படுத்தி விடும். முக்கிய இஸ்லாம் நாடுகள் பாகிஸ்தானிய தீவிரவாதத்தை விரும்பவில்லை. சீனா தீவிரவாதத்தை ஆதரிக்காது. இந்தியாவை பகைக்காது? பாக்கிஸ்தான் ராணுவம் தீவிர வாதிகளை கட்டுப்படுத்த முடியாது . இந்திய நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்.


abdulrahim
மே 07, 2025 11:04

நண்பரே இது தேவை இல்லாத கருத்து இஸ்லாமியர்களாக நாங்கள் ஒருபோதும் தீவிரவாதம் செய்பவர்களை ஆதரிக்கவில்லை எங்கள் அனைவரையும் நீங்க தீவிரவாதிகள் என சொல்வதைத்தான் எதிர்க்கிறோம் ,புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் நன்றி ...


HoneyBee
மே 07, 2025 09:52

Thank you Mr Ovasi... Never expected these types of words from your side... Thanks once


KNARAYANAN
மே 07, 2025 09:37

இவர் ஒரு தேச பக்தர் என்பதை நிரூபித்து விட்டார் பாராட்டுக்கள்


K Narayanan
மே 07, 2025 09:34

ஒவைசி அவர்களின் இந்த கருத்து மிகவும் முக்கியமானது ஒவைசி நம்நாட்டின் இறையாண்மையையும் தேசத்தையும் மதிக்கும் ஒரு தேசபக்தராக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க ஒவைசி வாழ்க பாரதம் வளர்க பாரதம் ஜெய் ஹிந்த்


Davamani Arumuga Gounder
மே 07, 2025 09:33

இவர் இனத்தால் இந்தியர்... மதத்தால் இஸ்லாமியர். ஜெய் ஹிந்த்


abdulrahim
மே 07, 2025 11:10

இதைத்தான் நாங்க அனைவருமே சொல்கிறோம் தேசத்தால் நாம் இந்தியர்கள் மதத்தால் அவரவர்க்கு பிடித்த ஒன்றை பின்பற்றுகிறோம் ஆனால் எங்களை மதரீதியாக தேசத்தில் இருந்து பிரித்து அவதூறு பேசுவோரை காணும்போதுதான் அவர்களோடு வாதம் செய்யவேண்டி இருக்கிறது ...


B N VISWANATHAN
மே 07, 2025 09:22

இவருக்கு கண்டிப்பா ஒரு ஓ போட்டு ஆகணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை