உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

ஜம்மு: காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்று( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.கடந்த 9ம் தேதி காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். பின்னர் நேற்று கத்துவா மாவட்டத்தில் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் அளித்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eddcua2w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நேற்று இரவு தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பொது மக்கள் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 5 பேர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், ட்ரோன் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
ஜூன் 12, 2024 11:19

இண்டி கூட்டணி வரும் என்று நினைத்தான் போல பாக்கி. வெறுப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்று இவர்களை ஏவி விட்டுள்ளான். மோடி வென்றதற்கு வாழ்த்து கூட தெரிவிக்க மனமில்லாமல், மோடி பதவி ஏற்கும் வரை காத்திருந்தார்கள்.


Kannan Soundarapandian
ஜூன் 12, 2024 11:19

பா ஜ க 9ம் தேதி சத்தியப் பிரமாணம் செய்த பின் இரண்டாவது தீவிரவாத நடவடிக்கை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இது பா ஜ க விற்கு பெரிய பின்னடைவு.


Kasimani Baskaran
ஜூன் 12, 2024 10:09

இஸ்ரேல் போல அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் ஒரு பொழுதும் திருந்தாது.


venkat eswaran
ஜூன் 12, 2024 09:13

கான்கிராஸ் சிறிதளவு சீட் ஜெயித்ததற்கே பேயாட்டம் போடுகிறார்கள்... இலவசமாக லட்சங்களை கொடுப்போம் என்கிறார்கள். நாட்டை விற்றாவது பி ஜே பி ஆட்சிக்கு வருவதை தடுக்க நினைப்பது தீவிரவாத செயல் போலவேதெரிகிறது... கான்கிராஸ் இன் இந்த போக்கு நாட்டிற்கு நல்லதல்ல..


sethu
ஜூன் 12, 2024 09:13

வேறு வழி இல்லை நம்ம ராகுல் கண்டி + ஸ்டாலின் +கேஜரிவால்+ மம்தா +உமர் அப்துல்லாஹ் இவர்களை நைட் டூட்டி காஸ்மீரில் போட்டுடலாம் .


Sivakuamar Panneerselvam
ஜூன் 12, 2024 08:33

இப்படியே விட்டால் ரொம்ப துளிர் விட்டு விடும். கடுமையான அட்டாக் கொடுத்தால் தான் வாலை சுருட்டிக் கொண்டு இருப்பார்கள் சைத்தான்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ