| ADDED : ஜூலை 26, 2025 09:56 PM
புதுடில்லி: தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்னையில், தற்போதையை நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை நேற்று முன்தினம் மோதலாக வெடித்தது. ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். கம்போடியாவில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.இந்நிலையில் டில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இது தொடர்பாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான எல்லையில் உள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.இந்தியா இரு நாடுகளுடனும் நெருக்கமான மற்றும் நட்புறவைக் கொண்டுள்ளது, மேலும் இரு தரப்பினரும் விரோதங்களை நிறுத்துவதற்கும் மேலும் மோதலைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.அங்குள்ள இந்திய பயணிகள், உதவிக்கு இரு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம்உதவி எண்: +66 61 881 9218 (வாட்ஸ் ஆப் அழைப்பு உள்பட),கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்: +855 92 881 676 (வாட்ஸ் ஆப் அழைப்பு உள்பட) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்