உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் செக்போஸ்ட்...

தங்கவயல் செக்போஸ்ட்...

எனக்கு வேணாம் கோலாரு!சில மாதங்களில் நடக்க இருக்கும் பெர்ய்ய தேர்தலில் உள்துறை அமைச்சர், கோலார் தொகுதியில் போட்டியிடணுமுன்னு சிலர் உசுப்பேத்தினாங்களாம். சில அமைச்சர்களுக்குள் சிண்டு முடிக்கும் வேலை செய்ததை புரிஞ்சிக்கிட்ட உள்துறை அமைச்சரு, அவர்களின் ஆசை வலையில் சிக்காமல் நழுவிட்டாரு.எதுக்குப்பா, எனக்கு தேவையில்லாத வேலை எல்லாம். 30 வருஷத்துக்கு முன்னாடியே 'சீட்' தருவதாக எனது வீட்டைத்தேடி வந்தாங்க. அப்பவே, நாட்டின் தலைநகர் அரசியலில், எனக்கு விருப்பமில்லைன்னு முற்றுப் புள்ளி வெச்சிட்டேனே. மறுபடியும் பெர்ய்ய தேர்தலில் போட்டியிட அழைக்கிறாங்க; விருப்பமே இல்லை. ஆளை விடுங்கப்பான்னு உள்துறை காரரு சொல்லிட்டாராம். ஆனால், உணவுத்துறை அமைச்சரோ, கோலாரில் ஜெயிச்சி காட்டுறேன். 'மறுபடியும் ஒரு சான்ஸ் தாருங்கள்' என மேலிடத்தில் கேட்கிறாராம்.அம்மாவை சிக்க வெச்சிட்டாரே!அரசு தரிசு நிலம் 3.10 ஏக்கரை, கைக்கார அசெம்பிளிக் காரரின் தாயாருக்கு சட்ட விரோதமாக வழங்கியதாக சமூக ஆர்வலர் ஒருத்தரு, ஊழல் ஒழிப்பு படையில 2018ல் புகார் செஞ்சாரு. ஆளுங்கட்சி அசெம்பிளிக்காரர் என்பதால் பல 'சி' மதிப்புள்ள அரசு பிராபர்ட்டியை சுருட்டிக்கலாமான்னு பலரும் கேள்வி கேட்டாங்க. இந்த புகாருக்கு அசெம்பிளிக்காரரின் அம்மா உட்பட 5 ஆபிசர்கள் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவாயிடுச்சாம். இன்னும் என்னென்ன வெளியே கிளம்ப போகுதோ. இந்த அசெம்பிளிக் காரரு மந்திரி பதவி வேறு கேட்கிறாராம். நோட்டுக்கு நோ ஓட்டு!ஒரு சப்போர்ட்டும் இல்லாமல், பட்டுவாடா செய்யாமல், காக்கிகளின் மிரட்டல்களை தாண்டி 583 ஓட்டுகள் வாங்கியவருக்கு காவித் துண்டு போர்த்த போறாங்க. அதுக்கு வலை வீசிட்டாங்க. காவிக் காரங்க தாமரையை தான் போட்டியிட வைக்கலயே, மாறாக இவருக்கு சைடு சப்போர்ட் செய்திருந்தா 'கை' ஓங்கி இருக்காதுன்னு லேட்டா யோசிச்சி இருக்காங்க. இதனால் தான் கோல்டு சிட்டியில் 11- வது வார்டில் தாமரைக்கு ஓட்டு வாங்க லோக்., தேர்தலுக்கு இவரை இழுக்க போறாங்களாம். 3,000 பேருக்கு பட்டுவாடா செய்து 1,000 பேர் கூட ஓட்டுப்போடலையே, 2,000 பேருக்கு மேல் நோட்டுக்கு நோ ஓட்டுன்னு ரிசல்ட் கொடுத்திட்டதை கைகாரங்கள யோசிக்க வெச்சிருக்கு.ஊர்க்காவல் படை அலுவலகம் வருமா?ஊர்க்காவல் படை அலுவலகம் சிதிலமடைந்து நாசமானது. யாரை பலியிட செய்யுமோன்னு பலரது பார்வை இருந்தது. இந்த கட்டடத்தை புதுப்பிப்பாங்கன்னு பார்த்தால், அலுவலகத்தையே கோலாருக்கு 'பார்சல்' செய்துட்டாங்க. 1,000 பேர் ஊர்க்காவல் படையில் பணியாற்றினவங்க, ஆபிஸ் வேலைக்கு கோலாருக்கு ஓட வெச்சிட்டாங்க. மறுபடியும் கோல்டு சிட்டியில் ஊர்க் காவல் படை ஆபிசை ஏற்படுத்த கோரிக்கை எழுப்ப ஞானோதயம் வந்திருக்குது. உள்துறை கவனிக்குமா அல்லது நீர் மேல் எழுத்தாக இருக்குமா. இப்படி தான் உரிகம் தபால் நிலைய கட்டடமும் பழுதானது. அதை ரிப்பேர் செய்யாமல் ஷிப்ட் செய்தாங்க. 15 ஆண்டுகளாக அந்த தபால் நிலையமும் இன்னும் திரும்பவே இல்லையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை