உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கயல் செக்போஸ்ட்

தங்கயல் செக்போஸ்ட்

சாலை பெயரில் பணம் மோசடி?உரிகம் பேட்டையின் மஞ்சுநாதா நகரின் சாலைக்கு ஜல்லி கொட்டி ஐந்து ஆண்டுகள் கடந்து போயும் கூட, இன்னும் சாலை அமைக்கவே இல்லை. ஜல்லிகளும் மாயமாகிறது.சாலை போடாமலேயே பில் வாங்கி சாப்பிட்டதாக முனிசி., வட்டாரத்தில் சொல்றாங்க.தற்போதுள்ள முனிசி., உறுப்பினர்களாவது, இதன் பேரில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.இந்த 750 மீட்டர் சாலைக்கு எப்போது தான் விமர்சனம் கிடைக்க போகுதோ?இப்பகுதி மக்கள் இந்த சாலைக்காக போராட்டம் நடத்த போறதா சொல்றாங்க.'கல்தா' கொடுக்க வேண்டும்!கோல்டு சிட்டியின் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை, வருவாய்த்துறையின் ஆபிசர், மற்றும் கிராம கணக்காளர் சேர்ந்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்காங்க.இதனால், பாதிக்கப்பட்ட பெண், தனது சகோதரருக்கு தெரிவித்திருக்கிறார். தனது சகோதரிக்கு ஏற்பட்டு வரும் கொடுமையை தட்டிக்கேட்க ஆபிசுக்கு வந்தார்.வந்தவர் ஆபிசரை பளார்.. பளார்ன்னு வெளுத்து வாங்கியுள்ளார். அக்கம் பக்க அலுவலக அறையில் இருந்து மற்ற ஊழியர்கள் வந்ததும், ஆபிசர் தப்பித்தால் போதுமென வெளியேறிவிட்டார்.வட்டாட்சியரும் ஒரு பெண். தொகுதி எம்.எல்.ஏ.,வும் ஒரு பெண். எனவே அங்கு பணியாற்றும் மற்ற பெண்கள் இந்த விஷயத்தில் ஒண்ணு கூடிட்டாங்க.போலீசுக்கு போகாமல், மாவட்ட கலெக்டருக்கு புகார் செய்து, டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்காங்க.ஆனாலும், அந்த ஆபிசருக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோபமாக பேசுறாங்க.இந்த ஆபிசரால் மற்ற பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதும் மெல்ல கசிந்து வருகிறது.அத்துடன் பென்ஷன் கேட்டு விண்ணப்பிக்க வரும் இளம் விதவைகளுக்கும் தொல்லை கொடுத்து வருவதாகவும் சொல்றாங்க. அதனால் இவருக்கு விரைவில் கல்தா கொடுக்க வேண்டும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.தேர்தலுக்காக தாய் மொழி முகவரி!சர்வதேச தாய் மொழி தினம் நேற்று நாடெங்கிலும் கொண்டாடினாங்க. தாய் மொழி பெருமைகளை போற்றினாங்க.கோல்டு சிட்டியில் தாய் மொழிக் கல்விக்காகவே நான்கு இளைஞர்கள் மார்பை திறந்து காட்டி துப்பாக்கி குண்டுக்கு இறையானாங்க. இவர்களின் கனவு, லட்சியம் எல்லாமே தாய் மொழி வாழ வேண்டும் என்பது தான்.ஆனால், 100 தமிழ் வழிப் பள்ளிகளில் 98 பள்ளிகளை மூடிட்டாங்க.நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் வழி ஆசிரியர் களை பிற சிட்டிகளுக்கு தூக்கியடிக்கப்பட்டாங்க.இந்த தாய் மொழியை உயிராய் நேசித்தவர்களை மண்ணுக்கு உரமாக கொடுக்க முடிந்ததே தவிர, தாய் மொழியை காப்பாற்ற பொறுப்பானவங்க மறந்துட்டாங்களே.தாய்மொழி கல்விக்கு ஒரு துளியும் உதவிடாதவங்களே தேர்தல் நேரத்தில் மட்டும் மண்ணின் மைந்தர், தாய் மொழி, இனப் பற்று முகவரியை காட்டுறாங்க.ஓட்டு மீது இவங்க காட்டுகிற விசுவாசம், தாய் மொழி மீது காட்ட, இவர்களுக்கு விழிப்புணர்வு எப்போ வரப்போகுதோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ