உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிசம்பர் 2ல் துவங்குகிறது 4வது காசி தமிழ் சங்கமம்

டிசம்பர் 2ல் துவங்குகிறது 4வது காசி தமிழ் சங்கமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகம் - வாரணாசி இடையே கலாசார மற்றும் கல்வி பகிர்வு திட்டமான காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது நிகழ்வு, டிசம்பர் 2ல் துவங்கி 15 வரை நடக்க உள்ளது. உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் தமிழகம் இடையே உள்ள கலாசார தொடர்பை உயிர்ப்பிக்கும் நோக்கில், முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, 2022ல் துவங்கியது. இது ஒரு மாத காலத்திற்கு நடந்தது. மூன்றாவ து நிகழ்ச்சி, 2024 டிசம்பரில் நடக்க வேண்டியது தாமதமாகி, கடந்த பிப்ரவரி, 15 முதல் 24ம் தேதி வ ரை நடந்தது. இந் நிலையில், நான்காவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2ல் துவங்குகிறது. இதன் நி றைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்க உள்ளது. 'தமிழ் கற்போம்' என்பது இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கான கருப்பொருளாக உள்ளது. தமிழ் மொழியின் செழுமை குறித்து வட மாநில மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். முந்தைய நிகழ்ச்சிகளை போலவே இந்த ஆண்டும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தமிழகம் சார்பில் சென்னை ஐ.ஐ.டி.,யும், உத்தர பிரதேசம் சார்பில் பனாரஸ் ஹிந்து பல்கலையும் இணைந்து நடத்த உள்ளன. இந்த ஆண்டு நிகழ்ச்சி குறித்து ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது: தமிழகத்தின் தென்காசியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி வரை அகத்தியர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இது அகத்திய முனிவர் பயணித்த பாதையைப் பின்பற்றி நடக்கும். உ த்தர பிரதேசம் மற்றும் வாரணாசியை சேர்ந்த, 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து, மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனத்தின் தமிழ் மொழி அறிமுக அமர் வுகளில் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMESH KUMAR R V
நவ 09, 2025 12:08

இதுதான் தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். பெருமை கொள்வோம்.


Kasimani Baskaran
நவ 09, 2025 07:19

தெலுங்கு பேசும் திராவிடர்கள் இதில் கலந்து கொள்வது சந்தேகமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை