உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதிக்கு அவமரியாதை மன்னிப்பு கேட்டார் முதல்வர்

ஜனாதிபதிக்கு அவமரியாதை மன்னிப்பு கேட்டார் முதல்வர்

பெங்களூரு : நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒருமையில் பேசியதற்கு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால், முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார்.சித்ரதுர்காவில் நேற்று முன்தினம் நடந்த ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வு மாநாட்டில் பேசிய முதல்வர் சித்தராமையா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒருமையில் பேசியிருந்தார்.இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், நாட்டின் முதல் குடிமகளை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து, தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளதாவது:ஜனாதிபதி திரவுபதி முர்மு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவுக்கு அழைக்காமல், பா.ஜ., தலைவர்கள் அவமதித்தது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது மட்டுமின்றி, கோபத்தையும் ஏற்படுத்தியது.ஒடுக்கப்பட்டோர் விழிப்புணர்வு மாநாட்டில் சுற்று உணர்ச்சிவசப்பட்டு ஜனாதிபதியை ஒருமையில் பேசினேன்.என்னை போல் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் அப்பா, அம்மா உள்ளிட்ட பெரியவர்களை ஒருமையில் பேசுவது வழக்கம். மதிப்புக்குரிய ஜனாதிபதி, என்னை போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரை ஒருமையில் பேசியிருக்கக் கூடாது. கவனக்குறைவாக நடந்த தவறுக்கு வருந்துகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ