உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேள்விக்கு பதிலளிக்காத ராம்தேவ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

கேள்விக்கு பதிலளிக்காத ராம்தேவ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

புதுடில்லி, தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்க தவறிய, 'பதஞ்சலி' நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராம்தேவ் நேரில் ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பி உள்ளது.பிரபல யோகா குரு ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என, அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்கும்படி பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கை, கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்காத பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், பதஞ்சலி நிறுவனம் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த வழக்கில், நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதஞ்சலி நிறுவனம் ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை? உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது? வழக்கின் அடுத்த விசாரணையின் போது, பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இணை நிறுவனர் ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
மார் 20, 2024 17:20

நீதிமன்றம் இவரை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது... அவமதித்தவரையே ஒன்றும் செய்ய வில்லை!


vbs manian
மார் 20, 2024 12:50

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல இருமல் மருந்துகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.


Sampath Kumar
மார் 20, 2024 11:22

இந்த பிராடு ஆசாமி கு தான் நம்ம ஜி அள்ளிஅள்ளி கொடுத்தாரு இப்போ இவரு நல்ல வாங்கி தின்னு ஏப்பம் விற்ற அப்புறம் ஏந்த கோர்ட் என்ன சொன்னாலும் இந்த பிராடு சாமி கேக்காது


vbs manian
மார் 20, 2024 11:16

பத்து வருடங்களுக்கு முன் பிரபலமாயிருந்த அல்லோபதி மருந்துகள் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன. இன்றும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் விற்பனை. ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பர்ய அழியாத மருந்துகள் உள்ளன. ஹைதராபாதில் ஆண்டு தோறும் லச்சக்கணக்கான மக்கள் ஆஸ்துமா நோய் குணமாக மீன் வயிற்றுக்குள் வைத்து கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்தை உட்கொள்கின்றனர்.இதற்கும் வழக்கு போட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் நம்பிக்கை அனுபவம் கடைசியில் வெல்கிறது. கோட்டக்கல் அயர்வைத்யா சாலா நூறு ஆண்டு பாரம்பர்யம். இலங்கை அதிபர் மற்றும் பல வெளிநாட்டினர் வந்து பயன்பெறுகின்றனர்.


Apposthalan samlin
மார் 20, 2024 10:48

காலரா போலயோ பலதரப்பட்ட நோய்கள் ஆங்கில மருத்துவத்தால் மட்டும் குண படுத்த முடிகிறது தமிழ் மருத்துவத்தால் முடியாதது சில நோய்கள் தமிழ் மருந்துகளால் முடியும் ஆங்கில மருந்துகளாலும் முடியும் இன்றைக்கு 99 சதா வீதம் ஆங்கில மருந்துகளை எடுக்கிறார்கள் . பலனும் கிடைக்கிறது .


கனோஜ் ஆங்ரே
மார் 20, 2024 10:25

இன்னும் அறுபது நாளுக்கு காவி உடை அணிந்த சாமியார்கள் ஆஜராக மாட்டாங்க, யுவர் ஹானர். அப்புறம் பாருங்க... தொபுக்கடீர்னு சாஷ்டாங்கமா நீதிமன்றத்தில் வந்து விழுந்து வணங்குவானுங்க....?


vijai seshan
மார் 20, 2024 09:43

இவங்களால குணப்படுத்த முடியாட்டி மொத்த மருத்துவம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்களே


விடியல்
மார் 20, 2024 09:22

அந்த ராம் தேவ் அவர்களின் மருந்து குணப்படுத்தவில்லை என்று ஆங்கில மருத்துவம் நிருபிக்க கேட்டு கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டும்.சர்க்கரை நோய் ஆங்கில மருந்துகள் குணப்படுத்துவது கிடையங. பக்க விளைவுகள் உண்டு அவர்களின் மீது தடை கொண்டு வர கோர்ட்டுக்கு தைரியம் உண்டா


vbs manian
மார் 20, 2024 09:20

குறைகள் சில இருந்தாலும் ராம்தேவ் மிக சிறந்த சேவை செயகிறார். ஆயுர்வேதம் இந்தியாவின் மூச்சுக்காற்று. மிளகும் மஞ்சளும் இல்லாத வீடு இந்தியாவில் உண்டா. இவரது வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொறுக்கவில்லை. பெரும் குற்றம் செய்தவர் போல் நடத்தப்படுகிறார். இந்தியாவின் பரம்பரை மருத்துவத்தை உயிரூட்டி மறுபடியும் அரங்கேற்றும் இவருக்கு இப்படி ஒரு சோதனையா. நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.


யோகன்
மார் 20, 2024 07:48

தேர்தல் பத்திரம் எவ்ளோ வாங்கியிருக்காரோ?


விடியல்
மார் 20, 2024 09:24

நேரடியாக பதில் சொல்லாமல் 200₹ கோஷ்டி தேவையில்லாத இடங்களில் மூக்கு நுழைப்பது ஏன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை