மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட என்பதை வாக்காளர்களுக்கு எடுத்து கூறும் வகையில், எவ்வளவோ பணிகள் செய்தாலும், கிராமப்புறங்களை ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு குறைவு என்பது 2019 லோக்சபா தேர்தலில் நிரூபணமானது. ஏழு தொகுதிகளில் 13 ஆயிரம் முதல் 96 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளனர்.நாட்டின் 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், ஐந்து ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.வரும் லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன், அறிவிக்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு உள்ளன.கடந்த லோக்சபா தேர்தல், இரண்டு கட்டங்களாக நடந்தது. 67 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. அதிகபட்சமாக மாண்டியாவில் 80.24 சதவீதமும்; பெங்களூரு தெற்கில் 53.48 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட என்பதை வாக்காளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், எவ்வளவோ பணிகள் செய்தாலும், கிராமப்புறங்களை ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு குறைவு என்பது 2019 லோக்சபா தேர்தலில் நிரூபணமானதுகர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு 51.75 சதவீத ஓட்டுகளும்; காங்கிரசுக்கு 32.11 சதவீத ஓட்டுகளும்; ம.ஜ.த.,வுக்கு 9.74 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. இத்தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணியாக போட்டியிட்டாலும், இரண்டும் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. பா.ஜ., 26 இடங்களில் வெற்றி வாகை சூடியது.கடந்த தேர்தலில் ஏழு வேட்பாளர்கள் 13 ஆயிரம் முதல் 96 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.... பாக்ஸ் ...தொகுதி ..... வெற்றி பெற்றவர் ..... ஓட்டுகள் ..... தோல்வியடைந்தவர் ..... ஓட்டுகள் ..... வித்தியாசம்கலபுரகி ..... உமேஷ் ஜாதவ் (பா.ஜ.,) ..... 6,20,192 ..... மல்லிகார்ஜுன கார்கே (காங்.,) ..... 5,24,740 ..... 95,452கொப்பால் ..... கரடி சங்கண்ணா (பா.ஜ.,) ..... 5,84,997 ..... ராஜசேகர பசவராஜ் எத்னால் (காங்.,) ..... 5,47,573 ..... 38,397பல்லாரி ..... தேவேந்திரப்பா (பா.ஜ.,) ..... 6,01,338 ..... உக்ரப்பா (காங்.,) ..... 5,75,681 ..... 25,707சித்ரதுர்கா ..... நாராயணசாமி (பா.ஜ.,) ..... 6,26,195 ..... சந்திரப்பா (காங்.,) ..... 5,46,017துமகூரு ..... பசவராஜ் (பா.ஜ.,) ..... 5,96,127 ..... எச்.டி.தேவகவுடா (ம.ஜ.த.,) ..... 5,82,788 ..... 13,339பெங்களூரு சென்ட்ரல் ..... மோகன் (பா.ஜ.,) ..... 6,02,853 ..... ரிஸ்வான் அர்ஷத் (காங்.,) ..... 5,31,885 ..... 70,968- நமது நிருபர்
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago