உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதியின் வெளிச்சம் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீதியின் வெளிச்சம் இந்த நாட்டின் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.சுப்ரீம் கோர்ட்டில், சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: நீதி என்பது ஒரு சிலரின் சலுகை அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனின் உரிமை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் என்ற வகையில் நமது பங்கு, சமூகத்தின் ஓரங்களில் நிற்கும் கடைசி நபரைக் கூட நீதியின் வெளிச்சம் சென்றடைவதை உறுதி செய்வதாகும்.அனைவருக்கும் சட்ட உதவி மற்றும் நீதி கிடைப்பதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதில், நீதித்துறையின் முக்கிய பொறுப்பை பிரதமரின் வருகை பிரதிபலிக்கிறது. பொருளாதாரம், ஜாதி, பாலினம், மொழி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நபரும் நீதித்துறை தனக்குச் சொந்தமானது என்று உணர வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

theruvasagan
நவ 09, 2025 16:53

ஐயா. கொஞ்சம் தள்ளி நி்ல்லுங்க.


bharathi
நவ 09, 2025 16:05

If you come to TN we will provide a plastic chair nothing more ...that is called social justice in our model


V Venkatachalam, Chennai-87
நவ 09, 2025 14:09

ஆமாம் ஐயா டமில் நாடு இந்தியாவின் கடைக்கோடியில் தான் இருக்குங்க. அந்த டமில் நாடு விடியல் ஆட்சியின் கீழ் இருக்குங்க. ஆக கடைக்கோடி மாநில முந்திரிங்க பண்ணுகிற ரௌடிராஜ்யத்துக்கு இதுவரை சாதகமான நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கீங்க. இனிமேலும் அதே மாதிரி பண்ணி நீதியை நிலை நாட்ட உங்க ஜுனியர் எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணிட்டு போங்க. குட்பை.


பேசும் தமிழன்
நவ 09, 2025 14:05

நீதி கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்... எல்லாம் சரி தான் .....ஆனால் எப்படி கிடைக்கும் ..... காசு இருப்பவன் குற்றம் செய்தும் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே சுற்றி வருகிறான்.. ஆனால் ஏழைப்பாலைகள் .... உள்ளே இருக்கிறார்கள் .... இது தான் இன்றைய நீதியின் நிலை .... ஆளுநர் மற்றும் நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு மனுவின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிக்கும் நீதிமன்றங்கள் .... ஒரு வழக்கை விரைந்து முடிக்க காலக்கெடு எதுவும் ஏன் நிர்ணயிப்பதில்லை ??


panneer selvam
நவ 09, 2025 13:35

Usual heroic dialogue but nothing could be done for the last 75 years thanks to impediment of legal luminaries . Still a civil case takes not less than 15 years to get first judgement and another 25 years to get final judgement . Any corruption case will get final judgement after before 20 years . Any death penalty for a heinous crime will be commuted by higher courts . So another routine advice from Chief Judge before his final days


Selvam Palanisamy
நவ 09, 2025 12:23

நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்க. நாங்க இருட்டுக்குள்தான் இருக்கோம்


Rajasekar Jayaraman
நவ 09, 2025 12:04

பொருந்தாத பதவி பொருத்தமற்ற ஆள்.


SIVAKUMAR
நவ 09, 2025 11:53

ஏழை சொல் அம்பலம் ஏறாது


arunachalam
நவ 09, 2025 10:12

முதலில் அந்த வெளிச்சம் உங்கள் அலுவலகத்தில் விழுந்து உங்கள் தலைக்குள் புகட்டும். ஏன் என்றால் அங்கு பாமரனுக்கு இருட்டும், வேண்டியவருக்கு வெளிச்சமுமாக உள்ளது. நீதி எல்லாம் காணவே இல்லை.


vbs manian
நவ 09, 2025 09:58

பாமர மனிதன் உச்ச நீதிமன்ற கதவை சுலபமாக தட்ட முடியுமா? பிரபலங்களுக்காக நீதிமன்றம் நடுநிசியில் கூட கூடுகிறது.


சமீபத்திய செய்தி