இன்று பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு ?
டில்லி:மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம், இன்று நேற்று இரவு வரை நீடித்தது. இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில், பரபரப்பு நிலவுகிறது.லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை, தலைமைத் தேர்தல் ஆணையம் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அறிவிக்க உள்ளது.இரவு வரை நடந்த கூட்டம்
இந்நிலையில், பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் டில்லி, தீனதயாள் உபாத்யாய சாலையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர். இரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது.மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ், குழுவின் உறுப்பினர்கள் எடியூரப்பா, சர்பானந்தா சோனோவால், லட்சுமணன், வானதி சீனிவாசன், இக்பால் சிங் லால்புரியா, சுதா யாதவ், புபேந்திர யாதவ், ஓம்பிரகாஷ் மாத்துார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இரவு வரை நீடித்த இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலவீனமாக கருதப்படும் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகள், ஏற்கனவே பட்டியலிடப்பட்டு, அங்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற ஆலோசனைகள் நடந்து முடிந்துவிட்டன.இதையடுத்து 130 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல், இன்று வெளியிடப்படலாம் என கூறப்படுவதால், பா.ஜ., வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவுகிறது