கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடுக்கு தலைவர்கள் அழைப்பு ரீல்ஸ் செய்ய ஏரியில் குதித்தவர் பலி
ஸ்ரீராமபுரம்: வடலுார் ஸ்ரீ ஜோதி ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் தலைமையில், கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு ஆதரவு கலந்தாய்வு கூட்டம்,ஸ்ரீராமபுரம் எல்.என்., புரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.மாநாட்டு நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் பங்கேற்று பேசினார். சமரச சன்மார்க்க நிர்வாகிகள், கர்நாடக தமிழ் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தனஞ்செயன், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி, சன்மார்க்க சங்க துணைத்தலைவர் ஜெகநாதன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசியவர்கள், மாநாட்டுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.கூட்ட ஏற்பாடுகளை நிர்வாகிகளுடன் இணைந்து டி.முனுசாமி செய்திருந்தார்.வடலுார் ஸ்ரீ ஜோதி ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க அலுவலகத்தில், கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் பேசினார். இடம்: பெங்களூரு.