மனைவி மீது சந்தேகம் இளைஞரை சுட்டவர் கைது
மாண்டியா: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்து, இளைஞரை கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.மாண்டியா, பாண்டவபுராவின் ஷம்போவினஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ், 35. இவர் மும்பையில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். அவ்வப்போது தன் குடும்பத்தினரை பார்க்க, ஊருக்கு வருவார்.சில நாட்களுக்கு முன், கிராமத்துக்கு வந்திருந்தார். தன் மனைவியுடன், அதே கிராமத்தின் மஞ்சு, 27, பேசி பழகுவதை கண்டார். இதனால் தன் மனைவியுடன், மஞ்சு கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த சிவராஜ், தகராறு செய்ய துவங்கினார்.நேற்று காலை இவரது வீட்டு திண்ணையில், மஞ்சு அமர்ந்திருந்தார். இவரை பார்த்து கோபம் அடைந்த சிவராஜ், துப்பாக்கியால் சுட்டதில் மஞ்சு தலையில் குண்டு உராய்ந்து சென்றதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.பாண்டவபுரா போலீசார், சிவராஜை கைது செய்தனர்.