உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னது, ரூ.1,000 கோடியா...? கர்நாடகாவை உலுக்கும் அடுத்த முறைகேடு; சித்தராமையாவுக்கு சான்ஸ்

என்னது, ரூ.1,000 கோடியா...? கர்நாடகாவை உலுக்கும் அடுத்த முறைகேடு; சித்தராமையாவுக்கு சான்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியாக உள்ள மூடா வழக்குக்கு போட்டியாக, முந்தைய பா.ஜ., அரசு மீதான ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை சித்தராமையா கையில் எடுத்துள்ளார்.

மூடா

மைசூரில் உள்ள மூடா எனும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டது முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g7t4ojf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இறுதித்தீர்ப்பு

இதனிடையே, தன் மீதான விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளித்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, வரும் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், விசாரணையை தொடர, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் கட்சி மேலிடம் தயாராகி வருகிறது

கொரோனா நிதி

இந்த நிலையில், பா.ஜ., தலைமையிலான முந்தைய கர்நாடகா அரசு கொரோனா நிதியை கையாண்ட விதத்தில் புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தொற்று பரவிய சமயத்தில், ரூ.13,000 கோடி செலவிடப்பட்டதில், சுமார் ரூ.1,000 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும், பல ஆவணங்களை காணவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மிஸ்ஸிங்

இது தொடர்பாக நீதியரசர் டி.குன்ஹாவின் அறிக்கையில், ரூ.1,000 கோடி வரையிலான பணம் செலவிடப்பட்டதற்கான ஆதாரமில்லை என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை

இந்த பரபரப்பான சூழலில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நேற்று கூடியது. அதில், நீதியரசரின் இந்த அறிக்கை குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு நெருக்கடி தரும் பா.ஜ.,வுக்கு பதிலடியாக இந்த விவகாரத்தை கிளப்பி விட சித்தராமையா முடிவெடுத்துள்ளார். வரும் நாட்களில் இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் புயல் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subash BV
செப் 08, 2024 18:49

Suitcases politics. BHARATH politicians are all same except a few. ITS JUST A DRAMA TO FOOL PUBLIC.


Narayanan
செப் 06, 2024 13:51

அரசியலுக்கு வரும் எவனும் தொண்டுசெய்யவருவதில்லை . குறிக்கியகாலத்தில் பணம் படைத்தவன் ஆகிவிடவேண்டும் . அதை தக்கவைத்துக்கொள்ள கட்சியில் தொடர வேண்டும் . அவ்வளுவுதான். இன்று சீமான், திருமால்வளவன் , வேல்முருகன் இவர்கள் எல்லாம் ஊழலை பற்றி பேசுகிறார்கள் . ஆனால் அவர்களின் குறுகியகால செல்வ வளர்ச்சியை பாருங்களேன் நம்மை அசரவைக்கிறது . பொது மக்கள் மட்டுமே ஏமாளிகள்


sankaranarayanan
செப் 06, 2024 12:59

ஆகமொத்தம் இரண்டுபேரும் திருட்டுப்பசங்கதான் என்பதை இவர் நிரூபோக்கிறார் தான் ஒன்று ம் செய்ய வில்லை என்று இவர் சொல்லவில்லை ஆனால் அவர்களும் இது போன்று செய்திருக்கிறார்கள் என்று இதற்கு ஒரு சப்பை கட்டு கட்டுகிறார் அப்படி என்றால் இதுவரை ஏன் இவர் வாயைமூடிக்கொண்டு இருந்தாராம்


rsudarsan lic
செப் 06, 2024 12:58

1000 கோடி ரவுண்டு பிகர் எடுபடாது. கொஞ்சம் மேக்கப் பண்ணிடுங்க


Ramaswamy Jayaraman
செப் 06, 2024 11:56

எங்களோடது 1000 கோடி மட்டும். உங்களோடது 4000 கோடி. நீங்கதான் பெரிய ஊழல்வாதி . அதுனாலதான் நீங்க பதவிக்கு வந்துட்டீங்க. எங்களுக்கு சான்ஸ் கொடுத்தா நாங்க திறனை காட்டுவோம்


Narayanan
செப் 06, 2024 13:55

கருணாநிதி சொன்னமாதிரி தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான் அல்லவா ? 13000 கோடியில் 1000 கோடிதானே நக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த மஹாமேதை 4000 கோடியை அடித்திருக்கிறான்


krishnan
செப் 06, 2024 11:50

bjp shd ask yediyurappa to project a honest team next tme.


Nandakumar Naidu.
செப் 06, 2024 11:36

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும், சமூகத்திற்கும் மிகவும் கேடு விளைவிக்கும். தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத கட்சி. மண்ணோடு மண்ணாக அழிக்க பட வேண்டிய ஒன்று.


சமூக நல விரும்பி
செப் 06, 2024 11:11

ஏட்டிக்கு போட்டி. சேரு எறியும் போட்டி. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


krishnan
செப் 06, 2024 11:48

both will compromise


Lion Drsekar
செப் 06, 2024 11:01

முன்பெல்லாம் சிறைக்குச் சென்றால் மட்டுமே அரசியல் கட்சிகளில் அங்கீகாரம் மற்றும் அமைச்சர் பதவி ஆனால் தற்போது பல லட்சம் கோடி முறைகேடு இருந்தால் மட்டுமே அங்கீகாரம் , அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ , பாராட்டுக்கள் வந்தே மாதரம்


A Viswanathan
செப் 06, 2024 11:40

சரியான போட்டி.காங்கிரஸிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


S Regurathi Pandian
செப் 06, 2024 10:59

இப்படி அரவர் செய்த முறைகேடுகளை அம்பலப்படுத்துங்கள். தண்டனை வழங்குங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை