உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு கரன்சிகளை திருடிய தமிழகத்தை சேர்ந்தவர், ரூ.100 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார். இந்த விவகாரம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மட்டும் தினமும் கோடிக்கணக்கில் வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ.100 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தார். அதன் வாயிலாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

ரூ.100 கோடி சொத்து

அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். விசாரணையில், பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ஒப்புக்கொண்ட ரவிக்குமார், அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ரூ.100 கோடி அளவிற்கு தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் கூறியுள்ளார்.

நன்கொடை

இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால், தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றது. அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த விவகாரம் பற்றி ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர், மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஆந்திர சட்ட மேல்சபையில் அமைச்சர் இந்த முறைகேடு குறித்து பேசியதை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

கல்யாணராமன் சு.
ஆக 03, 2024 10:53

\இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால்\ .... இப்போ மட்டும் என்ன, ரெட்டிப்பா, பக்தர்களின் நம்பிக்கை கெட்டு போயிடுச்சே .... தேவஸ்தானமும் இதுக்கு உடந்தைதான் அப்படின்னு ஆயிடுச்சே ... , \அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர்.\ .......அதென்ன ஒரு பகுதி ? திருடின 100 கோடியையும்தானே திருப்பி வாங்கணும் ...... ஆடி தள்ளுபடியா ?? \ இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது\ ... அறங்காவலர் குழு எப்படி ஒப்புதல் தரமுடியும் ? அரசுதானே தள்ளுபடி வியாபாரமெல்லாம் செய்யமுடியும் ? அப்போ அறங்காவலர்களுக்கும் இதிலே தொடர்பு உண்டுன்னுதானே கருத்துக்கொள்ளமுடியும் ??


கல்யாணராமன் சு.
ஆக 03, 2024 10:42

திருமலையிலும், பல்லாயிரம் மக்களுக்கு தினசரி மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.... ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல்,பசியின் தேவையறிந்து .... இரண்டாவதாக, எதிர்பார்ப்புகளுடன் செய்யப்படும் உதவி, உதவியே அல்ல .. அது ஒரு முதலீடாகி விடுகிறது ..


Sankar ARUMUGAM
ஜூலை 31, 2024 21:16

பணம் இருப்பவன் பசி என்றால் பாதம் அல்வா கொடுப்பதும் ஏழை பசி என்றால் விரட்டி அடிப்பதும். மக்களே கோவிலுக்கு கொடுப்பதை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் போன்றோருக்கு கொடுங்கள். அந்த உதவி நமக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு


Parthasarathy Badrinarayanan
ஜூலை 31, 2024 19:36

உண்மைதானே. தமிழன் உத்தமனா? செம்மரக் கடத்தல் கூட தமிழக கிரிமினல்கள் தானே நடத்துகின்றனர்?


Mohan Kumar Sundaram
ஜூலை 31, 2024 17:20

.தமிழ்நாட்டவன்‌ என்று சொல்லி ஜாதிய காப்பாற்ற தமிழனை இழிவுபடுத்தும் செயல் கண்டிக்கதக்கது.


SVS Maniyan
ஜூலை 31, 2024 16:45

, இது போன்ற குற்றங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.


Barakat Ali
ஜூலை 31, 2024 15:57

\\ தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், //// எங்கேயும் வெளிநாடு போயும் ஏதாவது சாதனை பண்ணியிருந்தா தமிழர்ன்னே போடுவோம் .... வெளிநாட்டுக்குப் போயி தப்புத்தண்டா பண்ணிப்புட்டா இந்தியர் ன்னு போடுவோம் .....


Barakat Ali
ஜூலை 31, 2024 15:55

தமிழன்டா ..............


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 15:43

இவர் திராவிடரா அல்லது தமிழரா ?


Viveham
ஜூலை 31, 2024 14:56

தெய்வம் நின்று கொல்லும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை