உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின அலங்கார ஊர்தி; தமிழகத்திற்கு மூன்றாவது பரிசு

குடியரசு தின அலங்கார ஊர்தி; தமிழகத்திற்கு மூன்றாவது பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ,புதுடில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்ற நிலையில், குடவோலை தேர்தல் முறையை பிரதிபலித்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி மூன்றாம் பரிசுக்கு தேர்வாகி உள்ளது. புதுடில்லியில், கடந்த 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக நம் நாட்டின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு கடமை பாதையில் நடந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் ஒன்பது அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.இதில் சிறப்பான ஊர்தி களை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர். ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் ஓட்டுகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.இதன்படி, தமிழகம் சார்பில் அணிவகுப்பில் இடம்பிடித்த, 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.கைவினை மற்றும் கைத்தறி துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடத்தையும் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

veeramani
ஜன 31, 2024 09:23

இந்திய குடியரசு எழுபத்தி ஐந்து விழாவை நானும் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்வுற்றேன். தமிழக வாகனம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, மேளம் தளத்துடன் நடேஸ்வரா ஒலியுடன் அணிவகுத்து வந்தது மகிழ்ச்சி. பரிசும் கிடைத்தது பேரின்பம். இஸ்ரோ சி எஸ் ஐ ஆர் வாகனங்களும் பங்கு எடுத்தன. மிக அருமை. இந்த விழா மிக்க மகிழ்ச்சி.


A1Suresh
ஜன 31, 2024 08:06

உத்திரபிரதேச அலங்கார ஊர்தியில் புல்டோசரும் இடம்பெற்றது. இதனைக் காண கண்கோடி வேண்டும். கலவரக்காரர்களுக்கும், அமைதி மார்கத்தினருக்கும் இதுவே சரியான பாடமாகும். இதை உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம் என்று பல மாநிலங்களும் பின்பற்றுகின்றன. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் .


Ramesh Sargam
ஜன 31, 2024 07:24

கொடுக்காவிட்டால், மோடி ஒழிக என்று சத்தம் போடுவார்கள். ஆகையால் இப்படி ஒரு ஆறுதல் பரிசு, அவ்வளவுதான்.


Mani . V
ஜன 31, 2024 06:14

திமுக வை குளிர்வித்து கூட்டணிக்குள் கொண்டுவர இந்த ஏற்பாடு.


Pandi Muni
ஜன 31, 2024 06:54

கழிப்பட்ட கட்சியை, திருட்டு கும்பலை B.J.P கூட்டணி உடன் சேர்ப்பார்களா? முரசொலி படிக்காதே.


Mani . V
ஜன 31, 2024 08:32

பார்த்து மெதுவா முட்டு. பால் வண்டி வண்டியாய் வருதாம்.


kijan
ஜன 31, 2024 06:02

ஜனநாயகம் என்பது ....நமது தாயனை (DNA). இன்றய 96 கோடி வாக்காளர்களுக்கு அடித்தளமிட்டது சோழர் கால குடவோலை முறை ... இதனால்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ....ஜனநாயகத்தை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் .... முதல் பரிசே கொடுத்திருக்க வேண்டும் ...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ