உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவியை கொன்ற வாலிபர் மீண்டும் தற்கொலை முயற்சி

மாணவியை கொன்ற வாலிபர் மீண்டும் தற்கொலை முயற்சி

கோலார்: காதலிக்க மறுத்த உயர்நிலை பள்ளி மாணவியை, கொலை செய்த பின், தற்கொலைக்கு முயற்சித்த வாலிபர், சிகிச்சை பெறும் மருத்துவமனை கட்டடத்தில் இருந்து, கீழே குதித்து தற்கொலைக்குமுயற்சித்தார்.பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட், அனுகொன்டனஹள்ளியில் வசிப்பவர் நிதின், 23. இவர் இதே பகுதியில் வசித்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை ஒருதலையாக காதலித்தார். தினமும் அவரை பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி, தொந்தரவு கொடுத்தார். ஆனால், மாணவி நிராகரித்தார்.பிப்ரவரி 7ல், மாணவியை வழிமறித்த நிதின், தன்னை காதலிக்கும்படி தகராறு செய்தார். மாணவி மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். தானும் கழுத்தை அறுத்து நிதின் தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை கோலார் நகரின் ஜாலப்பா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்தார்.இந்நிலையில் நேற்று மதியம், மருத்துவமனை கட்டடத்தின் இரண்டாவது மாடியின் காரிடாரில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை பார்த்த ஊழியர்கள், அவரை காப்பாற்றினர். அப்போது நிதின், 'என்னை சாக விடுங்கள்' என, அலறினார்.தகவலறிந்து அங்கு வந்த கல்பேட் போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ