உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிக மோசமான நிலையில் காற்றின் தரம் தரக்குறியீடு 317 ஆக பதிவு

மிக மோசமான நிலையில் காற்றின் தரம் தரக்குறியீடு 317 ஆக பதிவு

புதுடில்லி:தலைநகர் டில்லியில் காற்றி மாசு அதிகரித்து, அதன் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 317 ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.காற்றில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டில்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஹோட்டல்கள் மற்றும் திறந்த உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய தேவை தவிர டீசல் ஜெனரேட்டர் உபயோக்கப்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.முண்ட்கா, பாவானா, வசீர்பூர், ஜஹாங்கிர்புரி, ஆனந்த் விஹார், அலிபூர், அசோக் விஹார், அய நகர், புராரி, துவாரகா, மந்திர் மார்க் ஆகிய பகுதிகளில் காற்றில் மாசு மிக அதிகமாக உள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 93 சதவீதமாக இருந்தது. வெப்பநிலை அதிகபட்ச 35 டிகிரி செல்ஷியஸ் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை