உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி

கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு ஆதாரம் உள்ளது: மீண்டும் சொல்கிறார் மோடி

புதுடில்லி: கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கான ஆதாரம் உள்ளது என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: திமுகவும், காங்கிரசும் காட்சிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவும், காங்கிரசும் இணைந்து கச்சத்தீவை தாரை வார்த்தமைக்கு ஆதாரம் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தங்களின் குடும்பத்தினரை மட்டுமே சிந்திக்கிறது. தமிழக மீனவர்களை வஞ்சிக்கிறது. மீனவர்களுக்கென எதுவும் செய்யவில்லை. மீனவர்கள் நலனை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

venugopal s
ஏப் 01, 2024 21:56

காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவும் பிரதமர் மோடி அவர்களும் கடந்த பத்து ஆண்டு கால மத்திய ஆட்சியில் அதை மீட்க என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? தமிழர்கள் மீதும் தமிழகத்தின் மீதும் உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஏதாவது முயற்சி செய்து இருப்பார்கள், இது வெறும் தேர்தல் கோஷம் தானே?


Kaviraj
ஏப் 01, 2024 19:20

ஓட்டுப் போடுவதோ தி்முக விற்கு, மீட்கச் சொல்வதோ பாஜக வை , என்ன நியாயம்


Vijay
ஏப் 01, 2024 18:04

கமாண்ட படிக்க முடியவில்லை,பத்து வருடமாக ஆண்டும் கச்சத்தீவு வை மீட்க முடியவில்லை, இதன் பிறகு உங்கள் ஆட்சி தேவையில்லை


vijai
ஏப் 01, 2024 21:40

அப்ப இந்தியா கூட்டணி அரசு அமைத்தால் கட்சதீவை மிட்குமா


Jayaraman Ramaswamy
ஏப் 01, 2024 15:36

கட்ச்ச தீவு பற்றி என் பேசவேண்டும் இவ்வளுவு நாட்களாக பதவியில் இருப்பவர்களுக்கு தெரியாதா RTI போட்டுத்தான் தெரியவேண்டுமா


Narayanan
ஏப் 01, 2024 14:24

நாம் ஆதாரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டோம் அதை பற்றி பேசாமல் கச்சத்தீவை மீட்டு எடுக்க ஆவன செய்யுங்கள்


Sivagiri
ஏப் 01, 2024 12:43

அய்யய்ய - - இதெல்லாம் பேசி பேசி ஓய்ந்து போன பழைய கஞ்சி மேட்டர் - இதெல்லாம் திமுக வை வெல்ல உபயோக படாது - இப்ப உள்ள ட்ரெண்ட் படி ஈடி / ஐடி / ரைடுகள்தான் - அர்ரெஸ்ட் - - வேற வழியே இல்ல


Senthoora
ஏப் 01, 2024 13:11

அரெஸ்ட் பண்ணினாள் ஜெயிலுக்கு போனவரின் வாக்குதான் குறையும் மக்களுக்கு ஒன்றிய அரசின் மீது வெறுப்புதான் வரும் வாக்குவங்கி எதிர்க்கட்ச்சிகளுக்கு கூடும்


Indian
ஏப் 01, 2024 12:34

இவ்வளவு நாள் ஏன் இதை பத்தி பேசாம இப்போ தேர்தல் நேரத்திலே பேசுறாங்க இது வெறும் தேர்தலுக்கு தான் வேறு எந்த பயனும் இல்லை


Senthoora
ஏப் 01, 2024 13:05

வருஷமா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு, தேர்தல் முடிந்தபின் கச்சிதைதீவு எங்கே இருக்கு என்று கேட்பார்


முருகன்
ஏப் 01, 2024 11:57

பத்து வருடமாக மவுனமாக இருந்தது ஏன்


Ramanujadasan
ஏப் 01, 2024 12:17

அணைத்து தீமைகளையும் தாங்களே செய்து விட்டு எப்போதும் அந்த தீமைகளுக்கு மோடியை காரணகர்த்தா ஆக்கினால் அவரும் எதனை நாள் தான் பொறுமை காப்பார் ? அதுதான் இப்போது அடித்து தூள் கிளப்புகிறார்


Indian
ஏப் 01, 2024 12:34

மிக சரி


அசோகன்
ஏப் 01, 2024 11:02

நாங்களே விற்போம் அப்புறம் நாங்களே அதை மீட்பதாக ட்ராமா பண்ணுவோம்... புரியாத அப்பாவி தமிழ் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாட்டம்தான்


Gopal
ஏப் 01, 2024 12:15

இதுதான் இவர்களுடைய அரசியல் எல்லா பிரச்சனைக்கும் மூல காரணமே இவர்கள் தான் ஆனால் எங்களால் தான் தீர்க்க முடியும் அடித்து கூறுவார்கள் இவர்களை நம்புவது தமிழ் மக்களின் சாபக்கேடு


ramesh
ஏப் 01, 2024 11:02

இருநூற்று முப்பது ஏக்கர் பரப்பளவு உள்ள கட்ச தீவு பற்றி தாரை வார்த்து விட்டார்கள் என்று பேசும் இவர்கள், அருணாச்சல பிரதேசத்தில் ஆயிர கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு இடத்தை சீனா காரன் பிடித்து வைத்து இருக்கிறான், மேலும் அருணாச்சல பிரதேசம் எங்களுடையது என்று உரிமை கொண்டாடுகிறான், அவனை பார்த்து ஆக்கிரமிக்க பட்ட இடத்தை மீட்க முயற்சிக்காமல் பேட்டி பாம்பாக அடங்கி கிடந்தது விட்டு நம் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்க பட்ட இடத்தை எங்களிடம் மீண்டும் திரும்ப தா என்று கேட்பது எப்படி இருக்கிறது


Ramanujadasan
ஏப் 01, 2024 11:46

தமிழக மீனவர்கள் இலங்கையால் பிடிக்க பட்டால் இங்கே இருக்கும் வாய் சொல் வீரர்கள் அடிக்கும் கூத்து அளவிட முடியாது அவர்களை இலங்கைக்கு அனுப்பி , அந்த மீனவர்களை மீது கொண்டு வர செய்ய வேண்டும் அதுதான் நமக்கு நன்மை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ