மேலும் செய்திகள்
வானில் ஒரு அதிசய நிகழ்வு: இன்று பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
4 hour(s) ago | 2
பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற கொடூரப் பெண் கைது
4 hour(s) ago
புதுடில்லி: இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே இருதரப்பு உறவில் மேலும் சமநிலை வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் பயணமாக இந்தியா வரும் நிலையில், தொழில்துறை சம்மேளனமான இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புIuஎப்ஐசிசிஐ, இந்தியா-, ரஷ்யா வணிக மன்றக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார்.பியூஷ் கோயல் பேசியதாவது:உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவிலிருந்து இந்தியா அதிகளவில் எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதால், வர்த்தகம் பெருமளவில் ரஷ்யாவிற்குச் சாதகமாக உள்ளது.ஆகவே இந்த வர்த்தக உறவில் மேலும் சமநிலை வேண்டும்.இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் திறன் கொண்ட துறைகளில் நுகர்வோர் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆட்டோமொபைல்கள், டிராக்டர்கள், கனரக வணிக வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற மின்னணு சாதனங்கள், தொழில்துறை கூறுகள் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும்.இருதரப்பு வர்த்தகம் 70 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது போதாது, நாம் மேலும் வளர வேண்டும் சமநிலைப்படுத்த வேண்டும்.இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.
4 hour(s) ago | 2
4 hour(s) ago