உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒன்றும் கிடைக்காத வீட்டில் சிசிடிவியில் திட்டிய திருடன்

ஒன்றும் கிடைக்காத வீட்டில் சிசிடிவியில் திட்டிய திருடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: திருடச் சென்ற வீட்டில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்த திருடன், அங்கு இருந்த 'சிசிடிவி' கேமராவை பார்த்து திட்டிவிட்டு, 20 ரூபாயை வீசிச் சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது. தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், மகேஸ்வரம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் திருடுவதற்காக, திருடன் ஒருவன் சென்றான். வீட்டில் நகை, பணம் இருக்கிறதா என அனைத்து அறைகளையும் அலசி ஆராய்ந்த திருடன், எதுவும் சிக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்தான்.வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து, '1 ரூபாய் கூட இல்லாத இந்த வீட்டிற்கு சிசிடிவி கேமரா எதற்கு' என, சைகையில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான்.பின் பிரிஜ்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சென்ற திருடன், மீண்டும் திரும்பி வந்து தன் பர்சில் இருந்து, 20 ரூபாயை எடுத்து தண்ணீருக்காக என்று கூறி, மேஜை மீது வீசி விட்டுச் சென்றார். மறுநாள் காலை வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சிசிடிவி காட்சிகளை சோதித்த போது, திருடனின் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து அவர்,போலீசில் புகார் அளித்ததுடன், சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளத்திலும் வெளியிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N Ravi
ஜூலை 29, 2024 09:49

திருடனுக்கும் அரசுக்கும் எண்ணெய்யை சம்மந்தம் வேலையில்லாதவன் குடிகாரன் ரவுடி இப்படியாக இருக்கலாம் அல்லவா


Azar Mufeen
ஜூலை 27, 2024 15:59

திருடனா இருந்திருந்தா மொத்த வீட்டையும் திருடி காசு பார்த்திருப்பான்


தியாகு
ஜூலை 27, 2024 12:00

இதுவே டுமிழ்நாட்டின் திமுகவின் உடன்பிறப்பு திருடனா இருந்திருந்தால் அந்த கேமராவை திருடிவிட்டு ப்ளாக்கில் விற்றுவிட்டு காசு பார்த்திருப்பான். பிழைக்க தெரியாத திருடன்.


Senthoora
ஜூலை 27, 2024 15:31

இப்படி ஒரு சம்பவம் வந்தது, மத்திய அரசுக்கு கேவலமா இல்ல, தனிமனிதனின் இன்றைய நிலையை உணர்த்தி இருக்கிறான்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2024 09:12

குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து திருடி கொண்டிருக்கிறார்


sundarsvpr
ஜூலை 27, 2024 07:31

திருட சென்றவர் பாவம் செய்திட சென்றார். 20 ரூபாய் வைத்துவிட்டு சென்றதால்.


subramanian
ஜூலை 27, 2024 07:29

டேமேஜ் ஏவரு துட்டு இஷ்தாரூ?


subramanian
ஜூலை 27, 2024 07:24

மரியாதையாக வந்து உடைத்த பூட்டுக்கு காசு கொடுத்து செல்ல வேண்டும்.


Durai Kuppusami
ஜூலை 27, 2024 07:23

ரொம்பவே தமிழ்நாடு திருடன் போல் இல்லாமல் ரோஷமாக ரூபாய் 20 தண்ணீருக்காக வைத்த நல்ல திருடர். மரியாதை ரொம்ப முக்கியம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை