மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பங்கேற்பு
18-Mar-2025
பெங்களூரு: ஆஸ்டின் டவுன் நீலசந்திரா நடராஜர் கோவிலில் வரும் 13ல் திருவாசகம் முற்றோதுதல் நடக்கிறது.பெங்களூரு ஆண்ட அரச உழவார திருப்பணி குழு, அசோக் நகர் மாணிக்க வாசகர் அறமனை அடியாளர்கள் சார்பில் பல ஆண்டுகளாக, மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாதம் நாளை (12ம் தேதி) மாலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணி வரை தேவாரம் இன்னிசை கச்சேரி நடக்கிறது. வரும் 13 ம் தேதி ஆஸ்டின் டவுன் நீலசந்திரா நடராஜர் கோவிலில், திருச்சிராப்பள்ளி கணேசன் எனும் தாயுமானவன் தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் காலை 9:00 மணி நடக்கிறது.மேலும் விபரங்களை முருகவேள் என்பவரின் 98452 21921 மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம்.
18-Mar-2025