உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது: பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்கிறார் ஆந்திரா முதல்வர்!

இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது: பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்கிறார் ஆந்திரா முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்'' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; பீஹாரில் வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்வார். சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் அவர்களின் நலன்களுக்காக பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில், மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து வருகின்றன. 2000ம் ஆண்டு முதல் பிரதமர் அரசியலில் இருக்கிறார். அவர் எப்போதும் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார். முன்னதாக, அவர் குஜராத் முதல்வராக இருந்தார். 2014 முதல், 11 ஆண்டுகள் அவர் பிரதமராக இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் பிரதமராக இருப்பார். இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. அவருக்கு சொந்தமானது என்றால், அது தானாகவே இந்தியர்களுக்கு சொந்தமானது. எந்தவொரு நாட்டின் தனிநபர் வருமானமும் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆந்திராவில் 15 மாதங்களில் மாநில அரசு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை திரட்ட முடிந்தது, மேலும் ரூ.5 லட்சம் கோடி முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

malar mannan
அக் 25, 2025 19:34

500 ரூபாயை செல்லாது என்று அறிவிக்க சொன்ன அதிபுத்திசாலி.இந்தியாவின் No1 சுயநலவாதி.


T.Senthilsigamani
அக் 25, 2025 17:18

நடப்பது மோடி யுகம் . இந்தியா மோடிஜியின் தொலை நோக்கு பார்வை திட்டங்களால் உலக அரங்கில் ஆயிரம் வெய்யோன்கள் என எழும்பி பிரகாசித்து கொண்டிருக்கிறது .செயல் யோக பிதாமகனை வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன்


SS
அக் 25, 2025 17:02

சந்திர பாபு நாயுடு தனது மகனை வாரிசாக அரசியலில் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டுல வாரிசு அரசியல் என்று குதிப்பவர்கள் ஆந்திராவில் நாயுடுவை ஆதரிக்கின்றனர். எல்லாம் இரட்டைவேடம்.


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2025 19:06

இரட்டை வேடம் எதுவும் இல்லை , வாரிசு அரசியல் எனப்படும் நேபோட்டிசம் எதிர்க்கப்படுவது எதனால் , பதவி வெறிபிடித்தவர்களாய் அலைவது தான் சாபக்கேடு .கல்விநிலையத்தில் ஞானசேகரன் போன்ற சார்கள் வளர்வது உங்களை போன்றோரால் தான்


Rathna
அக் 25, 2025 15:55

பாரதியின் பாஞ்சாலி சபதம் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. "பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்". எப்போது ஒரு ஆட்சியின் சட்டம் மற்றும் நியாயம், ஆளுபவர்களிடம் இருந்து, காவலர்களிடம் இருந்து ரௌடிகளிடம் அயோக்கியர்களிடம் செல்கிறதோ அப்போது இறை பயம் போய், பேய்களின் ஆட்சி நடக்கும். அதற்கு சாட்சி அப்போதைய லாலுவின் பீகார், இப்போதய வங்காளம்.


Mohan
அக் 25, 2025 15:37

ஊழல் நாடு முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது


Raman
அக் 25, 2025 19:19

adimai pulambhal...


அப்பாவி
அக் 25, 2025 15:30

இதுக்கு முன்னாடி மோடியை தாக்கி இவர் பேசின பேச்சுக்களை கேட்டா புல்லரிக்குது...


Vasan
அக் 25, 2025 14:39

2019ம் ஆண்டு திரு.மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட்டதற்கு திரு.சந்திரபாபு வருந்துகிறார். மத்தியில் கவனம் செலுத்தி மாநிலத்தை கோட்டை விட்டார் 2019ல்.


Priyan Vadanad
அக் 25, 2025 14:13

திரு சந்திரபாபு சொல்வதில் உண்மை இருக்கிறது. இப்போதைய சூழலில் நமது பிரதமரின் உயரத்துக்கு ஈடு கொடுக்கக்கூடிய உயரத்தில் எந்த தலைவரும் இல்லை. வாழட்டும். நாடு வளரட்டும்.


Rathna
அக் 25, 2025 13:53

உண்மை தான். மறைமுக புரட்சி ஒன்று நடைபெறுகிறது, அது ரூபாய் மூலம் உலக நாடுகளுடன் வாணிபம். இந்தியா பல ஆயிரம் டன்கள் தங்கத்தை ரூபாய் மூலம் இறக்குமதி செய்து உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் இறக்குமதி இந்தியா ரூபாய் மூலம் நடக்கிறது. இது இந்தியா ரூபாயின் மதிப்பை உலக அளவில் நிலை நிறுத்தும். ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு புத்தொளி உண்டாக்க பட்டுஉள்ளது. இளம் ராணுவ வீரர்கள் களம் இறக்க பட்டு உள்ளனர். இதன் மூலம் சேமித்த பணம் உள் நாட்டு - ஸ்வதேசி ராணுவ தளவாடங்களை வாங்க பல லக்ஷம் கோடி ரூபாய் இந்தியா கம்பெனிகளுக்கு செல்கிறது. இதன் மூலம் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர்.


RAMESH KUMAR R V
அக் 25, 2025 12:59

பாரத மக்களுக்கு ஞானோதயம் வந்து விட்டது இனி எங்கும் உலக குரு மோடிஜி சகாப்தம் தான் அதுவே பாரதத்தின் அசுர வளர்ச்சி.


மனிதன்
அக் 25, 2025 21:12

மக்களுக்கு ஞானோதயம் வந்து விட்டது உண்மைதான்... இந்த எட்டு வருடங்களில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் அதிகம்...பணமதிப்பிழப்பின் காயங்கள் இன்னும் ஆறவில்லை, சிறுகுறு தொழில்கள் செத்துவிட்டது.., கேஸ், பெட்ரோல் மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.., ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் நொருங்கிவிட்டது.. வங்கிகளின் கொள்ளை, GST கொள்ளை, டோல்கேட் கொள்ளை இப்படி மக்கள் திரும்பும் பக்கமெல்லாம் கன்னிவெடி...ஆனால் ஒரு சாரார் மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள்... மக்களுக்கு ஞானோதயம் வருமா? வராதா???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை