உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தூக்கி அடிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்; சொல்கிறார் கே.டி.ஆர்.,

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் தூக்கி அடிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்; சொல்கிறார் கே.டி.ஆர்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தற்கான காரணம் என்ன என்பது குறித்து பாரத் ராஷ்ட்ரா சமிதி கட்சியின் கே.டி. ராமராவ் விளக்கம் அளித்துள்ளார். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது. பா.ஜ., 132 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதன்மூலம், மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வெறும் 49 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ., கூட்டணியின் வரலாறு காணாத வகையிலான வெற்றியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஏற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், பொய்யான வாக்குறுதிகளே காங்கிரஸ் கட்சியின் மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு காரணம் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த பாரத் ராஷ்ட்ரா சமிதி கட்சியின் கே.டி. ராமராவ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தெலுங்கானா மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்றாமல் துரோகம்செய்த காங்கிரஸின் செயலை மஹாராஷ்டிரா மக்கள் கவனித்துள்ளனர். பொய் விளம்பரங்களுக்கு மக்களின் வரிப்பணம் ரூ.300 கோடியை வீணடித்துள்ளனர். தெலுங்கானாவில் 1.6 கோடி பெண்களுக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை தருவதாகக் கூறிவிட்டு, அதனை வழங்கவில்லை. இந்த சூழலில், மஹாராஷ்டிராவில் பெண்களுக்கு ரூ.3,000 தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. ஜார்க்கண்டிலும் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி செய்ய முடியாது. மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் தேசிய கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநில கட்சிகள் மீது தான் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Jebamani Mohanraj
நவ 25, 2024 20:52

யார் ஆட்சி செய்தாலும் கொள்ளைதான் லட்சியம் மாதம் ₹3000 கொடுப்போம் என்பதெல்லாம் வெளிப்படையான லஞ்சம் அம்புட்டுதான்


Balaji R.
நவ 25, 2024 13:07

It only shows the extent to which Tamil speaking people have been fooled successfully by the so called guardians of "Thamizh mozhi" & "Thamizh Panpaduu"


R K Raman
நவ 25, 2024 11:46

பா ஜ க தேசிய கட்சி தான்


Esan
நவ 24, 2024 16:46

தமிழ்நாட்டில் திமுக அனைத்துப் பெண்களுக்கும் கூறிவிட்டு பாதிக்கும் குறைவான பெண்களுக்கு குடுத்ததைப் போல காங்கிரஸ் செய்யும் என்று மஹாராஷ்டிரா வாக்காளர்கள் யோசித்திருப்பர்.


Narayanswamy Sharma
நவ 24, 2024 14:04

After the lousy performance parties in Maharashtra, should think twice giving tall promises,if they do not have the wherewithalls.


M Ramachandran
நவ 24, 2024 13:37

எவ்வளவு தரம் மூக்கருந்தாலும் தவரை திருத்தி கொள்ளாத ஜென்மம். யாரையும் மதிப்பதில்லை. வாய்க்கு வந்ததை புழுகுதல்.


Rasheel
நவ 24, 2024 13:11

நாட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் தேச விரோத பேச்சு. இந்த நாட்டு கலாச்சாரத்தியே அழிக்க நினைக்கும் மத வெறி, பார்லிமென்டிற்கு உள்ளேயும் வெளியிலும் கோமாளி தனமான செயல்கள் இவர்களை பூண்டோடு அழிக்கும்.


M S RAGHUNATHAN
நவ 24, 2024 12:46

ஜார்கண்டில் காங்கிரஸ் ஒரு ஒட்டு சதை. JMM என்ன செய்தாலும் பார்த்துக் கொண்டு வாயில் விரலை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்


Ramesh Sargam
நவ 24, 2024 12:21

ஆனால் அதே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் புரிகிறதே..... இதற்கு என்ன பதில் கே.டி.ஆர். அவர்களே...???


theruvasagan
நவ 24, 2024 11:03

ஜார்கண்டிலும் கூட்டணி இல்லாமல் காங்கிரசால் ஆட்சி செய்ய முடியாதுன்னு சொல்லுகிறார். என்னவோ தெரியவில்லை. அரசியல் தலைவர்களில் இருந்து மீடியா புலவர்கள் வரை ஜார்கண்டில் கான்கிராஸ் கூட்டணி வெற்றி என்று கூவுகிறார்கள். அங்கு பெரும்பான்மை இடங்களை அதாவது 34 சீட்டுகளை கைப்பற்றினது ஜேஎம்எம் என்கிற மாநில கட்சி. கான்கிராசுக்கு கிடைத்தது வெறும 16 சீட். அதுவும் மாநில கட்சி தயவில். அது இல்லாவிட்டால் கான்கிராஸ் டிபாசிட் கூட வாங்க முடியாது. சோனி பப்பு பப்பிமா கூட்டணிதான் கான்கிராசை புதைக்கப் போகிறது. அடுத்தவன் வெற்றியை தன் வெற்றியாக காண்பிக்கும் ஈனபுத்தி குள்ளநரித்தனம் கட்சியை உருப்படாமல் போகடித்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை