உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிர்மலா சீதாராமன், நட்டா மீதான மிரட்டல் வழக்கு தள்ளுபடி

நிர்மலா சீதாராமன், நட்டா மீதான மிரட்டல் வழக்கு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி 8,000 கோடி ரூபாய்க்கு, தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உள்ளிட்டோர் மீதான வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மஹாலட்சுமி லே - அவுட்டில் வசிப்பவர் ஆதர்ஷ் அய்யர், 50. பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆதர்ஷ் அய்யர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரம் வாங்கி பா.ஜ.,வுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் ஆகியோரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமலாக்கத்துறை, கர்நாடக பா.ஜ., முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா மிரட்டி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vii780rc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பணம் தராவிட்டால் அமலாக்கத்துறை வாயிலாக ரெய்டு நடத்துவோம் என்று கூறி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி கே.என்.சிவகுமார், திலக்நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். கடந்த செப்., 28ம் தேதி, திலக்நகர் போலீசார் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, நட்டா, நளின்குமார் கட்டீல், விஜயேந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நளின்குமார் கட்டீல் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், “குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கியதால் பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளித்திருந்தால், அது முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாக இருந்திருக்கும். ''புகார்தாரர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இல்லை. மிரட்டி பணம் பறித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர அனுமதி முடியாது,” என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Oviya Vijay
டிச 04, 2024 16:19

இங்கே பிசப்பி கட்சியை சார்ந்த சில சங்கிகள் முக்கியமாக ngm... நான் என்றைக்கும் திமுகவை ஆதரித்து எழுதியதில்லை. அவ்வாறிருக்கையில் திமுகவிற்கு தனித்து போட்டியிட தைரியமிருக்கா என்றெல்லாம் என்னிடம் மடத்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதில் என்ன வேடிக்கையென்றால் நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சி என்றைக்கும் தாங்கள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவிக்கவில்லை... ஏதாவது கட்சி தங்களிடம் கூட்டணி வைக்க வந்து விடாதா என்று இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதனால் திமுக கூட்டணி நிலைத்து இருக்கிறது. இதை உங்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை என்பதனை உங்கள் ஆதங்கத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சியின் தலைவர்கள் ஒவ்வொருவரும் கூட்டணி குறித்து ஒவ்வொரு நிலைப்பாடு. அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து முடிவு செய்தால் துக்கடா கட்சிகளாவது உங்களைத் தேடி வரும். இல்லையேல் இப்படியே அடுத்த கட்சிகளைப் பார்த்து பொருமிக் கொண்டே மட சாம்பிராணியாக இருப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.


Barakat Ali
டிச 04, 2024 15:09

அந்த ஆதரசு ஈயர் பாஜகவுக்கு எதிரா மனு போட்டாரு .... அதனால கொத்தடிமைகளாகிய நாங்க மவுனம் .... வேறவிதமா நடந்திருந்தா நூலிபன்னு கதறியிருப்போம் ......


visu
டிச 04, 2024 12:57

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பிஜேபி மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வழக்கு அதை செய்திகளில் பரபரப்பாக்குவார்கள் அப்புறம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது மட்டும் எந்த மீடியாவிலும் வராது அவங்க வேலை முடிந்தது


Barakat Ali
டிச 04, 2024 15:07

தமிழகத்திலும் திமுக ஆட்சியில் அப்படித்தான் நடக்கிறது ........ உதாரணம் சவுக்கு சங்கரை நிஜ குற்றவாளி போல சித்தரித்த வி ஊடகங்கள் ..... அவர் மீது இது தொடர்பாக இனி வழக்கு கூடாது .... விசாரணை ரத்து என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தியை ஒரு ஓரமாக வெளியிட்டன அச்சு ஊடகங்கள் ....


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 12:09

இங்கே சில வாசகர்கள் விவாதம் செய்வதற்கு பதில், இன்னொரு வாசகர் மீது தனிமனித துவேஷம் ஏன் எழுதுகிறார்கள்? படித்தவர்கள் தானே? அநாகரிகமாக இருக்கிறது. பாஜக விற்கு எதிரா கருத்து போட்டால், உடனே அந்த 4 வாசகரை அடா புடா ங்க வேண்டியது, கொத்தடிமை ங்க வேண்டியது. அப்போ பாஜக வை ஆதரிக்கிறவர்கள் அந்த கட்சி தலைவர்களின் கொத்தடிமை என்று சொல்லலாமா? திமுக மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனால் நீதிபதிகளை திராவிட அடிமை, காங்கிரஸ் அடிமை என்று எழுதுவார்கள். பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தால், வாசகர்களை வசை பாடி எழுதுவார்கள். Funny guys Crazy


பாமரன்
டிச 04, 2024 12:56

சரியான கருத்து...


Bala
டிச 04, 2024 10:20

தேவையற்ற வழக்கு. உயர்நீதிமன்றம் சொல்லியதை முதல் நீதிமன்றமே சொல்லி வழக்கை அப்போதே முடித்து வைத்திருக்கலாம்.


Indian
டிச 04, 2024 09:29

மக்களால் நேரிடையாக தேர்ந்துஎடுக்க படாதவர் அமைச்சராக கூடாது ....


Oviya Vijay
டிச 04, 2024 08:22

தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இந்த அம்மையார் தோற்கடிக்கப் படுவார். தைரியம் இருந்தால் போட்டியிடட்டும்... பார்க்கலாம். அப்போது தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ளட்டும்...


ngm
டிச 04, 2024 09:19

டேய் அடிமை உன் daleevara முதல்ல கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலில் நிக்க சொல்லு. டெபாசிட் கூட தேறாது


venugopal s
டிச 04, 2024 07:23

உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் மிரட்டி தீர்ப்பை சாதகமாக வாங்கி விட்டார்களா? பாஜகவினர் இந்த விஷயத்தில் கில்லாடிகள்!


சூப்பர்
டிச 04, 2024 09:21

எப்டி தங்க முடி செ பா மாதிரியா


Kasimani Baskaran
டிச 04, 2024 06:05

நிர்மலா சீதாராமன் என்ன ரிச்சர்ட் மில்லே வாட்சா வாங்கி கட்டி இருக்கிறாரா - இல்லை நட்டாதான் ரோல்ஸ் ராய்ஸில் உல்லாசமாக பயணிக்கிறாரா - இல்லை காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அரசு கொடுத்த ஹெரால்டு பத்திரிக்கையை சாப்பிட்டு ஏப்பம் விட்டது போல வில்லங்கம் செய்திருக்கிறார்களா - நல்ல காமடி..


பாமரன்
டிச 04, 2024 12:58

காசி... நீங்க நம்ம ஜியை கலாய்க்கலையே...??


Kasimani Baskaran
டிச 04, 2024 06:05

நிர்மலா சீதாராமன் என்ன ரிச்சர்ட் மில்லே வாட்சா வாங்கி கட்டி இருக்கிறாரா - இல்லை நட்டாதான் ரோல்ஸ் ராய்ஸில் உல்லாசமாக பயணிக்கிறாரா - இல்லை காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அரசு கொடுத்த ஹெரால்டு பத்திரிக்கையை சாப்பிட்டு ஏப்பம் விட்டது போல வில்லங்கம் செய்திருக்கிறார்களா - நல்ல காமடி..


சமீபத்திய செய்தி