உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  உயிருடன் இருந்த நோயாளி இறந்ததாக அறிவிப்பு: டாக்டர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

 உயிருடன் இருந்த நோயாளி இறந்ததாக அறிவிப்பு: டாக்டர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

கான்பூர்: உ த்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி யை இறந்துவிட்டதாக அறிவித்த டாக்டர் உட்பட மூவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர் . உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஸ்வரூப் நகர் லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில் வினோத், 42, என்பவரும், அடையாளம் தெரியாத 60 வயது நபரும் அருகருகே சிகிச்சை பெற்று வந்தனர். இதில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 60 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், வினோத் இறந்துவிட்டதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சவக்கிடங்குக்கு உடலை கொண்டு செல்லும் முன், ஸ்வரூப் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, வினோத் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், இருவருக்கும் சிகிச்சை அளித்த டாக்டர், 60 வயது நபருக்கு பதிலாக, வினோத் இறந்துவிட்டதாக மருத்துவ பதிவேட்டில் தவறுதலாக குறிப்பிட்டதே, இந்தக் குழப்பத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. இதையடுத்து, சிகிச்சை அளித்த டாக்டர், நர்ஸ் உட்பட மூவரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
டிச 30, 2025 05:12

இதுவே தமிழ்நாடாக இருந்தால் இறந்தவரை உயிருடன் இருக்கிறார் என்று சொல்லியே பலப்பல லட்சங்களைக் கறந்து விடுவார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி