உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாரத்தஹள்ளியில் 28ல் தியாகராஜ ஆராதனை

மாரத்தஹள்ளியில் 28ல் தியாகராஜ ஆராதனை

பெங்களூரு: இந்திய பாரம்பரிய சாஸ்த்ரிய சங்கீதம், நடனம், இசை கருவிகள் இயக்குவது குறித்து ஆன்லைன் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள திரிகலா ஹவுஸ் ஆப் பைன் ஆர்ட்ஸ் பயிற்சி அளித்து வருகிறது.இந்த நிறுவனம், தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியை பெங்களூரில் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 28ம் தேதி மாரத்தஹள்ளி வாக்தேவி விலாஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பெங்களூரு, சென்னையில் இருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் இப்பகுதியில், முதல் முறையாக தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.காலை 10:30 மணிக்கு நடக்கின்ற, தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதியின் கோஷ்டி காயனா நிகழ்ச்சியையும்; மதியம் 1:30 மணிக்கு 'ராமா ஹனுமந்தா' -கருப்பொருளை அடையாளமாக வைத்து நடக்கும் இசை கச்சேரிக்கும் அனைவருக்கும் இலவசம்.மாலை 4:15 மணிக்கு நடக்கின்ற 'தியாக புஷ்பம்' -நாட்டியம், சங்கீதம், கதை ஆகிய மூன்றும் இணைந்த நிகழ்ச்சிக்கு மட்டும் டிக்கெட் பெற வேண்டும்.காலை முதல், மாலை வரை நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். 'தியாக புஷ்பம்' நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, புக் மை ஷோ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.கூடுதல் தகவலுக்கு, 7337778644 என்ற எண்ணிலும் அல்லது www.trikalaarts.comஇணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ