வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதோட பகுதியில் தானே இருக்கு. மனிதர்கள் அதோட பகுதிக்கு போய் புலி இருக்குன்னு சொன்னா என்ன பண்றது Mattupatti dam இருக்குற area வனப்பகுதி தான்
மூணாறு; மாட்டுபட்டி அணையின் கரையோரம் முதன் முதலாக புலி நடமாடியதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு மாவட்ட சுற்றுலாதுறை, மின்வாரியம் ஆகியோர் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அதில் பயணிக்கும் பயணிகள் அணையின் கரையோரம் அவ்வப்போது நடமாடும் காட்டு மாடு, யானை, மான், மயில் உள்பட பல்வேறு வன விலங்குகளை பார்த்ததுண்டு. இந்நிலையில் அணையின் கரையோரம் நேற்று முன்தினம் முதன்முதலாக புலி நடமாடியது. அதனை படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் பார்த்து அதிசயித்ததுடன், அதனை அலைபேசியில் படம் பிடித்தனர். மாட்டுபட்டி அணையில் படகு சவாரி செய்ய தினமும் நுாற்றுக்கணக்கில் பயணிகள் வந்து செல்வர். அதன் எண்ணிக்கை சீசன் நேரங்களில் ஆயிரக்கணக்காக அதிகரிக்கும். ஆகவே புலி நடமாட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
அதோட பகுதியில் தானே இருக்கு. மனிதர்கள் அதோட பகுதிக்கு போய் புலி இருக்குன்னு சொன்னா என்ன பண்றது Mattupatti dam இருக்குற area வனப்பகுதி தான்