உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை கைது செய்த நேரம்: அமலாக்கத்துறை பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கெஜ்ரிவாலை கைது செய்த நேரம்: அமலாக்கத்துறை பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்த நேரம் குறித்து மே-3 ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால், மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரது நீதிமன்ற காவல், வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.பின் நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:வாழ்வும், சுதந்திரமும் மிக முக்கியமானது. அதை நீங்கள் மறுக்க முடியாது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறையினர் தங்களுக்கு சில தரவுகள் கிடைத்ததாகக் கூறியிருந்தனர்.ஆனால், கெஜ்ரிவால் வழக்கில் அவ்வாறு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை துவக்கத்துக்கும், கைதுக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்பதையும் விளக்குங்கள். இதற்கான பதிலை அமலாக்கத் துறை அளிக்க வேண்டும். அடுத்த விசாரணையை மே.03 தேதி ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2024 11:02

கெஜ்ரிவால் ஏன் சம்மனை மதிக்கவில்லை மை லார்ட்


பேசும் தமிழன்
மே 02, 2024 08:57

வர வர....உச்ச நீதிமன்றம் மீதுள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக போய் வருகிறது ...கெஜ்ரிவால் அவர்களுக்கு அத்தனை முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது ஏன் என்று கேட்கவில்லை ....அவர் ஏதோ தான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது போல் நடந்து கொண்டார் .... அதனை கண்டிக்க துப்பில்லை ....கேள்வி கேட்க வந்து விட்டார்கள்.


J.V. Iyer
மே 02, 2024 04:13

கொள்ளைக்காரர்களை கைதுசெய்ய நல்லநேரம் பார்க்கவேண்டுமா, மை லார்ட்?


தாமரை மலர்கிறது
மே 01, 2024 23:49

கெஜ்ரிக்கு இன்னும் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்காமல் இழுத்தடிக்க கூடாது


Bala Paddy
மே 01, 2024 23:45

ஆமாம் கெஜ்ரிவால் ஒரு உத்தமர் அவருக்கு நோபல் பரிசு தர சொல்லு உச்ச நீதி அநீதி மன்றம் உத்திரவு ??


Rajkumar
மே 01, 2024 23:27

முதலில் இருந்தே கெஜ்ரிவால் ED நோட்டீஸ் சட்டபடி செல்லாது என்றே பதில் அளித்தாரே தவிர நீதி மன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க வில்லை ஆனால் ED இவர் அஜாரகததிற்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் அப்பொழுது தான் கெஜ்ரிவால் கைதுசெய்ய கூடாது என்று கேட்டார் ஆனால் நீதி மன்றம் மறுத்து விட்டது. அதன் பின்னர் தான் அவரை வீட்டில் விசாரித்து கைது செய்தார்கள். இதில் என்ன நேரம் சரியா இல்லையா என்று ஜோசியரையா கேட்க வேண்டும். உச்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒரு மேல் முறையீடு. இப்போது உச்நீதிமன்றம் சொல்ல வேண்டியது ED சம்மன் சரியா இல்லையா என்று தான். லஞ்சம் கேட்டு பெற்ற நபருக்கு என்ன வக்காலத்து. கோவா எலெக்ஷனுக்கு எங்கிருந்து பெறப்பட்டது


N Sasikumar Yadhav
மே 01, 2024 22:56

கெஜ்ரிவால் கைதுக்கு அமேரிக்கா ஜெர்மனி ஐநா இப்போது புதிதாக உச்சநீதிமன்றம் என பதறுகின்றன


RAJA68
மே 01, 2024 22:30

சுப்ரீம் கோர்ட் நீதிமான்களே கெஜ்ரி வாலுக்கு ஏன் வால் பிடிக்கிறீங்க. இந்த மாதிரி எடக்கு முடக்கா கேள்வி கேட்பதற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு மீது வழக்கு தொடர வேண்டும்.


Kasimani Baskaran
மே 01, 2024 21:59

சட்டத்தை மதிக்கவேண்டிய டெல்லி முதல்வர் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு ஒத்துழைப்பு இன்று வரை வழங்கவில்லை ஆகவே கைது செய்ததில் தவறு ஒன்றும் இல்லை இதில் உச்சநீதி மன்றம்தான் மூக்குடைபடப்போகிறது ஐ போனை ஒருவன் அரசாங்க செலவில் வாங்கினாலேயே நிச்சயம் குற்றவாளிதான்


ayen
மே 01, 2024 21:48

ஒன்பது முறை அதாவது ஒன்பது மாதமாக அவர்( முதல்வர்) அமலாக்க துறையிடம் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தார் என்பது உச்சி நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு தெரியுமா? தெரியாதா?. முதல்வருடைய ஜ போன் பாஸ் வேர்டு மறந்து விட்டதாக ஒரு பொய்யை கூறினாரே அதாவது நீதிபதிகளுக்கு தெரியுமா? அவரது அரசில் நடந்த முறைகேட்டிற்கு யார் பொருப்பேற்றுக் கொள்வார்கள்? என்பது நீதிபதிகளுக்கு தெரியுமா? தவறு செய்தவர்களை எப்பொழுது கைது செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா என்று நீதிபதிகள் சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் கூறும் கருத்துக்களை நீதிபதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ