| ADDED : ஏப் 11, 2024 10:29 PM
வயநாடு: வயநாடு தொகுதி எம்.பி.யாக நான் வெற்றி பெற்றால்இத்தொகுதியை சேர்ந்த சுல்தான் பத்தேரி நகரின் பெயரை மீண்டும் கணபதிவட்டம் என பெயர் மாற்றம் செய்வேன் என பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார். கேரளா வயநாடு தொகுதியில் காங். வேட்பாளராக ராகுல், பா.ஜ., வேட்பாளராக சுரேந்திரன், கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பா.ஜ. வேட்பாளரான சுரேந்திரன் தெரிவித்துள்ளதாவது, வயநாடு தொகுதி எம்.பி.யாக என்னை வெற்றி பெற செய்தால் இத்தொகுதியை சேர்ந்த சுல்தான் பத்தேரி நகரின் முந்தைய பெயரான கணபதி வட்டம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்வேன். 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்புசுல்தான் 1798-ல் இங்கு வடக்கு கேரளாவின் மலபாரை கைப்பற்றி கணபதி வட்டம் பெயரை சுல்தான் பத்தேரி என பெயர் மாற்றினர். இங்கு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. என்னை வயநாடு எம்.பி.யாக வெற்றி பெற செய்தால் சுல்தான் பத்தேரி என்ற பெயரை நீக்கி விட்டு மீண்டும் முந்தைய பெயரான ‛கணபதி வட்டம்' என மாற்றம் செய்ய முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாட பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காங்., கொண்டாட முனைந்தது. இந்த திப்பு அரசியல் கேரளாவின் வயநாடு தொகுதிக்கு பரவி வருகிறது.