உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஹிந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று (அக்.,20) நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இப்பண்டிகை வருடம் தோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியிலோ அல்லது அமாவாசை தினத்தன்றோ வருகிறது. தீபாவளி பண்டிகையை ஹிந்துக்கள் மட்டுமில்லாது சமணம், புத்த மதம் மற்றும் சீக்கிய மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு மதத்திலும் வேறுபடும் தீபாவளி நம்பிக்கை

ஒவ்வொரு மதத்திலும், இடத்திலும் தீபாவளி பண்டிகை வேறுபட்ட காரணங்களை கொண்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக பெரும்பாலான ஹிந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாக இதை கருதுகின்றனர். சமண மதத்தினை சேர்ந்தவர்கள் மகாவீரரின் இறுதி விடுதலை நாளை குறிக்கும் விதமாக இப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் தங்கள் குரு ஹர் கோவிந்த் முகலாய சிறையிலிருந்து விடுதலையான நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். புத்த மதத்தினர் தீபாவளியன்று செல்வத்தின் தெய்வமாக இருக்கும் லட்சுமியை வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி தேவியை வணங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கங்கா ஸ்நானம்

தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகாலை எழுந்து உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய் இட்டு வெந்நீரில் குளிக்கின்றனர். இப்புனித நாளில் இவ்வாறு எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்று ஹிந்துக்களால் நம்பப்படுகிறது.

இறை வழிபாடும் புத்தாடை அணிதலும்

பண்டிகை தினத்தன்று புத்தாடை மற்றும் விதவித இனிப்புகள் பலகாரங்களை பூஜை அறையில் வைத்து கடவுளை மக்கள் வணங்குவார்கள். பின் புத்தாடை அணிந்து கோவில்களுக்கும் சென்று இறைவனை வணங்குவார்கள்.

பட்டாசு வெடித்தல், வாழ்த்துக்கள் பரிமாறுதல்

தீமை அழிந்த நாளை கொண்டாடும் விதமாக தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள்.மக்கள் இந் நன்னாளில் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். பிற மதத்தினைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஹிந்து மதத்தினைச் சேர்ந்த நண்பர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் அன்பினை வெளிப்படுத்துவார்கள்.இந்நன்னாளில் உலகம் முழுவதும் வசிக்கும் தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் தினமலர் டாட்காம் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Modisha
அக் 20, 2025 18:53

தீமை அழிந்த நாள் . தமிழகத்தில் ஆறு மதம் கழித்து மீண்டும் ஒரு தீமை அழிந்த நாள் வரும். திமுக ஒழியும்.


சந்திரன்
அக் 20, 2025 15:17

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Palanisamy T
அக் 20, 2025 14:43

1. தீபாவளியென்றால் தீபங்கள் நிறைந்த வழிப் பாதையென்று பொருள்படுகின்றது. It means festival of light. The world has already recognized and respected it as a festival of light for Hindus. தீபவெளிச்சமென்றால் மகிழ்ச்சி கொண்டாட்டம். அதை தெய்வத் திருநாளாக வணங்கும் போது அந்த நாள் நமக்கு இன்னும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைகின்றது. ஆகையால் அங்கு குடித்து விட்டு கும்மாளம் போடுவதற்கு இடமில்லை. நமக்கு தீபாவளி ஆனால் மற்ற உயிரினங்களுக்கு அந்நாள் நரகத்தில் சிக்கிய நாளாக அமைந்து விடுகின்றது. தீபாவளியொரு சமயப் பண்டிகையென்பதை மறந்துவிட வேண்டாம். எல்லோருக்கும் என் இனிய தீப திருநாள். வாழ்த்துக்கள் .


ravichs
அக் 20, 2025 14:32

Sir In Tamil, it should be Deepavali, which has its own logical meaning . Why use Diwali ?


aaruthirumalai
அக் 20, 2025 10:53

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


ديفيد رافائيل
அக் 20, 2025 10:03

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


திருட்டு திமுக கைக்கூலி கொத்தடிமை
அக் 20, 2025 09:01

ராவணனை வதம் செய்து தீபாவளி கொண்டாடுவது போல் வரும் தேர்தலில் இந்த திமுகவை வதம் அடுத்த தீபாவளி இன்னும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்


Palanisamy T
அக் 20, 2025 18:17

1. இராவணனுக்கும் தீபாவளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. தீபாவளி முற்றிலும் சைவ சமய பண்டிகை. ஆகையால், தீபத் திருநாளன்று குடிக்கும் கலாச்சாரத்திற்கும் அசைவ உணவுகள் உண்பதுவை தவிர்ப்பதும் நன்று. 2. திமுக வை வதம் செய்வ. தென்று நீங்கள் நினைப்பது தவறு. கட்சியைக் காப்பாற்ற வேண்டும் அக் கட்சி இப்போது கருணாநிதியின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. கட்சி இப்போது மக்களின் நலனுக்காக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. செயல்படவும் முடியாது. இந்நிலை மாறவேண்டும். இதன் பின் விளைவு நாளை மககளுக்கே தெரியவரும். இது நாளை பெரும் பாதிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தலாம். திமுக என்ற கட்சியைக் குடும்பப் பிடியில் இருந்து உடனே காப்பாற்ற வேண்டும். வரும் தேர்தலில் சில தலைவர்களை களையெடுத்தாலே போதும். அவர்கள் யாரென்பது மக்களுக்கும் நன்றாகப் தெரியும். உங்களுக்கும் புரியும்.


venkat venkatesh
அக் 20, 2025 08:31

தீபாவளி வாழ்த்துக்கள்


Subramanian
அக் 20, 2025 08:27

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானத்திற்க்கு தலையில் நல்லெண்ணெய் வைப்பார்கள் தேங்காய் எண்ணை அல்ல


M.Sam
அக் 20, 2025 08:23

ஆளுக்கு அழ ஒரு ஆரணம் சொல்லி கொண்டதும் ஒரு பண்டிகை உன்டு என்றால் அது இந்த பண்டிகை தான் ஆக வியாபாரிகள் வாழ வகை செய்த அறிவாளிகளுக்கு natri


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை