உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறான வழிகாட்டிய கூகுள் மேப்: அணையில் சிக்கிய சுற்றுலா பயணியர்

தவறான வழிகாட்டிய கூகுள் மேப்: அணையில் சிக்கிய சுற்றுலா பயணியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரெய்லி: டில்லியில் இருந்து நேபாளத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொணட பிரான்ஸ் பயணியர் இருவர், கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால், உத்தர பிரதேசத்தின் அணைப்பகுதியில் சிக்கி தவித்தனர்.

பிரெஞ்ச் மொழி

ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த சுற்றுலா பயணியர் பிரைன் கில்பர்ட் மற்றும் செபஸ்டியன் கபீரியல். இருவரும் கடந்த 7ம் தேதி விமானம் வாயிலாக டில்லி வந்தனர். பின்னர் அவர்கள் நேபாளத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இருவரும் உத்தர பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியில் உள்ள சுரெய்லி அணைப்பகுதியில் சிக்கி தவித்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டனர். அதற்கு அவர்கள் பிரெஞ்ச் மொழியில் பேசியதால், கிராம மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சுரெய்லியில் உள்ள கிராம தலைவர் வீட்டுக்கு இருவரையும் அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தியதில், பிரான்சை சேர்ந்த அவர்கள் இருவரும் நேபாளத்தில் உள்ள காத்மாண்டு நகருக்கு கூகுள் மேப்பை பார்த்து செல்வதாக தெரிவித்தனர்.

பஹேரி பகுதி

அந்த மேப் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹேரி பகுதி வழியாக காட்டிய நிலையில், அணைப்பகுதியில் சிக்கி கொண்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களுக்கு சரியான வழியை காட்டி அவ்வழியே செல்ல அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜன 26, 2025 06:16

சுந்தருக்கு பத்ம் விபுய்ஷண் குடுத்து பாராட்டலாமே.


நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 05:55

ஆனைக்கும் அடிக்கடி அடிசறுக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை