உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளி பஸ் மீது டிராக்டர் மோதி 4 மாணவர்கள் பலி ஆண்டு விழா கொண்டாடி திரும்பும் போது பரிதாபம்

பள்ளி பஸ் மீது டிராக்டர் மோதி 4 மாணவர்கள் பலி ஆண்டு விழா கொண்டாடி திரும்பும் போது பரிதாபம்

பாகல்கோட்: பள்ளி வாகனம் விபத்துக்கு உள்ளானதில், நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.பாகல்கோட் ஜமகன்டியின், அலகூர் அருகில் வர்த்தமான மஹாவீரா சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளியில் நேற்று முன் தினம், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்கள் வீடு செல்ல, பள்ளி நிர்வாகம் பஸ் ஏற்பாடு செய்திருந்தது.

திடீர் விபத்து

நிகழ்ச்சி முடிந்த பின், மாணவர்கள் பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டனர். அலகூர் கிராமத்தின் அருகில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர், பள்ளி பஸ் மீது மோதியது. இதில் மாணவர்கள் சாகர் கடகோளா, 17, கோவிந்தா, 13, பசவராஜ், 17, மாணவி ஸ்வேதா, 13, ஆகியோர் உயிரிழந்தனர்.இறந்தவர்கள் கவடகி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.ஜமகன்டி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல்வர் வருத்தம்

முதல்வர் சித்தராமையா கூறியதாவது:பாகல்கோட் ஜமகன்டியின், அலகூர் அருகில் விபத்தில், பள்ளி மாணவர்கள் நால்வர் இறந்த சம்பவத்தை கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன். வாழ வேண்டிய பிள்ளைகள், இப்படி இறந்தது அநியாயம். மாணவர்களின் ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும்.விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி பஸ் விபத்துக்குள்ளானது, துரதிஷ்டவசமாகும். பள்ளி பஸ் ஓட்டுனர், டிராக்டர் ஓட்டுனரை விசாரிக்கிறோம். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. பள்ளி பஸ்களில் அதிகமான பிள்ளைகளை அழைத்துச் செல்லாதீர்கள்.- அமர்நாத் ரெட்டி, மாவட்ட எஸ்.பி., பாகல்கோட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை