உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் ரயில் தடம்புரண்டது: 4 பயணிகள் பலி; 7 பேர் காயம்

உ.பி.,யில் ரயில் தடம்புரண்டது: 4 பயணிகள் பலி; 7 பேர் காயம்

லக்னோ: உ.பி.,யின் கோண்டா மாவட்டத்தில் பயணிகள் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர்.சண்டிகரில் இருந்து அசாமின் திப்ருகார்க் நகருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள், உ.பி.,யின் கோண்டா மாவட்டத்தில், பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டது. அதில் 4 பயணிகள் இறந்தனர், 7 பேர் காயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அந்த வழியில் போக்குவரத்து முழுவதும் தடைபட்டு உள்ளது.

முதல்வர் உத்தரவு

ரயில் விபத்து குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

முதல்வரிடம் விளக்கம்

ரயில் விபத்து தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் அதிகாரிகள் விளக்கி உள்ளனர். மாநில அரசு, ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உதவி எண்கள் அறிவிப்பு

இந்த ரயில் விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்களை ரயில்வேத்துறை அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வேல்சாமி
ஜூலை 18, 2024 20:41

ரயில் அமிச்சர் ரொம்ப சாமர்த்தியசாலி.


Narayanan Muthu
ஜூலை 18, 2024 18:12

எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் பிஜேபி அரசால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கான அறிகுறியே காணோம். என்ன நிர்வாகமோ தெரியவில்லை.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 18, 2024 18:39

கடந்த பத்து வருடங்கள் இல்லாமல் இருந்த ரயில் விபத்துக்கள் புள்ளி கூட்டணிக்கு சில பல இடங்களில் வெற்றி கிடைத்த உடனே விபத்துக்கள் நடப்பது எப்படி என்று யோசனை செய்


தென்காசி ராஜா ராஜா
ஜூலை 18, 2024 17:14

இது என்ன அடிக்கடி ரயில் விபத்துகள் வருகிறது.கடுமையான நடவடிக்கை தேவை சம்பந்தப்பட்ட நபர் மிது


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ