உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரயில் பயணியர் முன்பதிவு அட்டவணை இனி 10 மணி நேரம் முன் வெளியாகும்

 ரயில் பயணியர் முன்பதிவு அட்டவணை இனி 10 மணி நேரம் முன் வெளியாகும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில் பயணியர் தங்கள் டிக்கெட் முன்பதிவின் இறுதி நிலையை, இனி ரயில் புறப்படுவதற்கு, 10 மணி நேரத்துக்கு முன்னரே அறிந்துகொள்ளும் வகையில் அட்டவணை வெளியீட்டில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. ரயில் பயணியர் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை, ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்தது. கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால், பயணத்தை மாற்றி அமைக்க பயணியர் சிரமப்பட்டனர்.இதையடுத்து, முன்பதிவு அட்டவணையை எட்டு மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணியர் சங்கங்கள் பரிந்துரைத்தன. அந்த கோரிக்கையை ஏற்று, அனைத்து மண்டல ரயில்வேயும், கடந்த ஜூலையில் இருந்து எட்டு மணி நேரத்துக்கு முன் அட்ட வணை வெளியிட்டு வருகின்றன. தற்போது அதை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர். அதன்படி இனி காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பயணியருக்கு அறிவிப்பு செல்லும். இதர ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பி ன் சிவகுமார்
டிச 18, 2025 22:27

முன்பு நான்கு மணிநேரம் முன்பு வரை டிக்கெட்டை காய்ச்சல் பண்ணலாம் ஏதாவது சிறிது பணம் கிடைக்கும். இப்போது பத்து மணிநேரம் முன்பே செய்ய வேண்டும். முன்பு வண்டியை தவறவிட்டாலும் டிக்கெட்டை காய்ச்சல் பண்ணலாம் ஆனால் இப்போது முடியாது பகற்கொள்ளை


Ramesh Sargam
டிச 18, 2025 13:24

இதை நான் வரவேட்கிறேன். நன்றி ரயில்வே அமைச்சகத்துக்கு.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 18, 2025 09:57

இதெல்லாம் சரிதான். ஆனால், தேவையான ரயில்களை தென்மாவட்டங்களுக்கு எப்போது இயக்க போகிறீர்கள்? மேலும் சிறப்பு ரயில்களை தேவையற்ற நாட்களில், தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களில் இருந்து இயக்குகிறீர்கள். இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. யாரும் கேள்வி கேட்பதில்லை. தத்திகளின் எம்பிக்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை