உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

மும்பை: பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், அதிகாரத்தை பயன்படுத்தி தனது சொந்த காரில் சிவப்பு விளக்கு பொருத்தியதுடன், மஹாராஷ்டிரா அரசு என்ற வாசகம் கொண்ட பெயர் பலகையை மாட்டி உள்ளார். இதனையடுத்து அவரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானவர் பூஜா கடேகர். 2023ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். இவர் புனேயில் பயிற்சிக்காக உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார். இவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயிற்சியில் இருக்கும் போது, தனது சொந்த காரில் சிவப்பு விளக்கு பொருத்தியதுடன், மஹாராஷ்டிரா அரசு என்ற வாசகம் கொண்ட போர்டையும் மாட்டினார். அலுவலகத்தில், உதவி கலெக்டர் வெளியில் செல்லும் போது அவரது அறையை எடுத்து கொள்வதுடன், அவரது அனுமதியின்றி அங்கிருந்த பொருட்களையும் அகற்றி உள்ளார். தனது பெயரில் பெயர் பலகை, லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும்படி , அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பதால், மகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் சுஹாஸ் திவாசே, தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். பூஜா கடேகர், வாஷிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ragu
ஜூலை 11, 2024 20:54

APPRECIATING THAT THE TRAINEE IAS OFFICER INSTEAD OF BEING AN EXAMPLE TO HER SUBORDINATES BENT THE RULES TO SUIT HER CONVENIENCE FOR WHICH SHE WAS ONLY TRANSFERED, ,BUT SHE MUST HAVE BEEN SUSPENDED ,


saminathan selvam
ஜூலை 11, 2024 15:31

Sari


Prasannan Prasannan
ஜூலை 11, 2024 05:38

குட்


ramasamy thanikkodi
ஜூலை 11, 2024 00:34

அப்பாவின் அதிகார பலம்


Mayakannan Kannan
ஜூலை 10, 2024 21:24

Israel Ku transfer. Saiyaom


சண்முகம்
ஜூலை 10, 2024 19:24

பயிற்சி அரசு அதிகாரிக்கு விலை உயர்ந்த வெளி நாட்டு ஆடி கார். இப்பவேவா?


துருவகுமார்
ஜூலை 10, 2024 19:19

உடனடியா டிஸ்மிஸ் செஞ்சு வூட்டுக்கு அனுப்பிச்சிருந்தா அடுத்த அதிகாரி செய்ய பயப்படுவர்


Iniyan
ஜூலை 10, 2024 18:33

டிஸ்மிஸ் செய்து ஐ ஏ எஸ் பட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.


Sivak
ஜூலை 10, 2024 17:58

இடமாற்றம் ஆஹா எவ்வளவு பெரிய தண்டனை ... இதே ஒரு சாதாரண ஆள் பண்ணி இருந்தா பைன் போடுவாங்க , ஜெயில்ல போடுவாங்க ...


S Sivakumar
ஜூலை 10, 2024 17:34

ஏன் இப்படி ஒரு வேலை செய்யும் அதிகார உள்ளவர்கள் இட மாற்றம் ஒரு தீர்வு கிடையாது. தகுதி இழப்பு உடனே செய்ய வேண்டும்


சமீபத்திய செய்தி