உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காடு, மலை கடந்து கழுதை மீது பயணம்; வழியெல்லாம் பிணங்கள்; சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர் கண்ணீர்

காடு, மலை கடந்து கழுதை மீது பயணம்; வழியெல்லாம் பிணங்கள்; சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர் கண்ணீர்

அமிர்தசரஸ்:சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதால் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள், ஏஜெண்டுகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் சட்டவிரோதமாக அந்த நாட்டில் குடியேறியவர்களை திருப்பி அனுப்பி வருகிறார். அதன்படி சட்டவிரோதமாக சென்ற இந்தியர்களையும் திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்கா துவங்கியது. பஞ்சாப் அமிர்தசரஸில் அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம் 104 இந்தியர்கள் நேற்று தாயகம் வந்து அடைந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yyhszixq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்படி வந்தவர்கள், பல்வேறு இன்னல்களை சந்தித்து அமெரிக்கா சென்றது குறித்த சில தகவல்களை பகிந்து கொண்டனர். குறிப்பாக, ஏஜென்ட்டுகளிடம் ரூ.50 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துவிட்டதாகவும் கண்ணீர் விட்டுள்ளனர்.பஞ்சாப்பின் தஹ்லி கிராமத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் கூறுகையில், 'அமெரிக்காவில் வேலை விசா வாங்குவதற்காக ஏஜென்ட்டுக்கு ரூ.42 லட்சம் கொடுத்தேன். கடைசி நிமிடத்தில் விசா கிடைக்கவில்லை. டில்லியில் இருந்து கத்தார் வழியாக பிரேசில் சென்றேன். அங்கு பெருவில் விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார். ஆனால், அப்படி ஏதும் செய்யவில்லை. மாறாக, டேக்ஸி மூலம் கொலம்பியா, பனாமாவுக்கு சென்றேன். அங்கு கப்பல் மூலமாக அனுப்பி வைப்பதாகக் கூறினார்கள். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இதையடுத்து, மலைப் பகுதிகளில் நடந்து சென்றோம். அங்கு மெக்சிகோ எல்லைக்கு சிறிய படகில் பயணித்தோம். என்னுடன் வந்தவர்கள் செல்லும் வழியில் உயிரிழந்தனர்,' எனக் கூறினார். தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த சுக்பால் சிங் இதேபோன்ற சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ' கடலில் 15 மணிநேரம் பயணித்தோம். 40 முதல் 45 கி.மீ., மலைகளில் நடந்து சென்றோம். காடு, மலைகளைக் கடந்து கழுதைகளில் பயணிக்கும் நிலையும் இருக்கிறது.பயணத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், அவர்களை அங்கேயே விட்டு விட்டு சென்று விடுவார்கள். அவர்கள் அப்படியே கிடந்து சாக வேண்டியதுதான். இப்படி போகும் வழியெங்கும் பிணங்களாக இருந்தன. எங்களை மெக்சிகோ எல்லையில் இருள் நிறைந்த சிறையில் 14 நாட்கள் அடைத்து வைத்தனர். சூரிய ஒளியைக் கூட நாங்கள் பார்க்கவில்லை. அங்கு பஞ்சாப்பை சேர்ந்த நிறைய பேர் இருந்தனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Kumar
பிப் 07, 2025 20:13

இந்தியாதான் பாதுகாப்பு அதுக்குள்ளேதான்பா தமிழ்நாடு நண்பரே


Mummoorthy Ayyanasamy
பிப் 07, 2025 18:53

தாய்நாடு தான் பாதுகாப்பாக இருக்க முடியும்.


RUKMANI RAO
பிப் 07, 2025 18:51

ஏன் முக்யமான ஒருவரை விட்டுவீட்டிர்கள் அவரின் முன்ணேர்கள் தான் ஓட்டு வங்கியாக இரக்குமதி செய்தனர் பாதுகாத்து வருகிறார்கள்எதாவது பேசினால் உடம்பு பற்றி எரியும்


Laddoo
பிப் 07, 2025 18:26

போனதே தவறு. இதில் அவனுக்கு இவங்க ஏன் வக்காலத்து வாங்குறாங்க?சீனன் கிட்ட இந்த பொறம்போக்குகள் கெடச்சிருந்தா அங்கேயே சுட்டு வீழ்த்தி கண்ட இடத்தில கடாசியிருப்பானுங்க


rajan_subramanian manian
பிப் 07, 2025 17:57

அமெரிக்கா மட்டுமல்ல. வளைகுடா நாடுகளிலும் விசா காலாவதி ஆகி தங்கி உள்ளவர்களை ஒரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை பொது மன்னிப்பு வழங்கி நாடு கடத்துவது வழக்கம். சிங்கப்பூர் மலேசியாவில் சவுக்கு அடியுடன் சிறை மற்றும் வெளியேற்றம். நமது நாட்டில் மட்டும் ஆதார் பான் வோட்டர் id கொடுத்து அரசுக்கு எதிராக வருடக்கணக்கில் போராட உரிமை உண்டு.அவர்களுக்கு மோடியை பிடிக்காத எதிர்கட்சி ஆதரவு அமோகமான உண்டு.


RADHAKRISHNAN
பிப் 07, 2025 17:07

அது அமெரிக்கா ஒன்றும் இந்தியா இல்லை வந்த நாதாரிகளை ஊடுருவிய நாதாரிகளை வெளியேற்ற நினைத்தாலே இங்கு ஊளையிட நிறைதீவிரவாத நாட்டை நாசமாக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது


Sithick Raja
பிப் 07, 2025 16:48

இங்கே நம் நாட்டில் என்ன வளம் இல்லை என அமெரிக்கா செல்கிறீர்கள்?? அங்கே செல்ல செலவழித்த 50லட்சத்தை இங்கேயே முதலீடு செய்தால் நீங்க 100 பேருக்கு வேலை குடுக்கலாமே??? இந்தியப் பொருளாதாரமும் வளருமே?


சூரியா
பிப் 07, 2025 06:03

எல்லை தாண்டி மீன்பிடித்துக் கைதான நமது மீனவர்களின் ஒப்பாரியைப்போல உள்ளது.


A P
பிப் 06, 2025 19:34

இந்தியாவில் அதைவிட கொடுமையை அனுபவித்திருப்பார்களோ என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கொஞ்சம் கூட தாய் நாட்டுப் பற்று இல்லாமல் குரைக்கும் நாதாரிகள் வெளிநாட்டுக்கு ஓடிவிட வேண்டியதுதான். அப்படி இந்தியாவில் கொடுமையை அனுபவித்தவனுக்கு, எப்படி 50 லக்ஷம் ரூபாய் ஏஜெண்டுக்குக் கொடுக்க முடிந்தது என்பதை சிந்திக்கக் கூட திராணி இல்லாதவர்கள்.


Karthik
பிப் 06, 2025 19:08

இந்த லஞ்ச குறுக்குவழி ஓடுகாலி ங்கள ஒரு அஞ்சு வருஷமாச்சும் முகாமில் அடச்சுவெச்சி தீவிரமா கண்காணிக்கனும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை