உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டங்ஸ்டன் சுரங்கம் : மறுஆய்வுக்கு பரிந்துரை செய்தது மத்திய அரசு: தமிழக அரசு மீதும் புகார்

டங்ஸ்டன் சுரங்கம் : மறுஆய்வுக்கு பரிந்துரை செய்தது மத்திய அரசு: தமிழக அரசு மீதும் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ள மத்திய அரசு, சுரங்கம் அமையும் பகுதிகளை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி ஆகிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான, புவியியல் குறிப்பாணையை கடந்த 2021 செப்., 14ல் தமிழக அரசிடம், இந்திய புவியியல் சர்வே(ஜிஎஸ்ஐ) அமைப்பு வழங்கியது. அந்த நேரத்தில், டங்ஸ்டன் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடம் தான் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n191bkdr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறகு, மத்திய அரசு கொண்டு வந்த சட்டதிருத்தத்தின்படி சுரங்க குத்தகைகள் மற்றும் ஏலத்திற்கு விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. இதில், டங்ஸ்டனும் அடங்கும். இதனடிப்படையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சகம், கடந்த 2023 செப்., 15ல், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான தனிமங்கள் ஏலம் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இதற்கு 2023 அக்., 03 ல் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர், மத்திய அரசின் சட்டத்திருத்தம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, முக்கியமான தனிமங்கள் ஏலத்தில் விடுவதற்கான உரிமை தமிழக அரசிடமே இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், 2021-2023 காலகட்டத்தில் முக்கியமான தனிமங்களை ஏலத்தில் விடுவதற்கு அதிகாரம் இருந்தும் தமிழக அரசு, எதையும் செய்யவில்லை. ஏலம் விடுவதற்கான அதிகாரம் இருந்தபோதிலும், ஒன்பது ஆண்டுகளில் ஒரு சுரங்கத்தைக் கூட தமிழக அரசு ஏலம் விடவில்லை.இதன் பிறகு, சட்டத்தின்படி, சுரங்கத்தை ஏலம் விடும் நடவடிக்கை துவங்கும் என தமிழக அமைச்சருக்கு கடிதம் எழுதிய பிறகு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் உள்ளிட்ட 3 முக்கிய தனிமங்கள் குறித்த விவரங்களை அளிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது.தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர், கடந்த பிப்.,8 ல் அளித்த கடிதம் மூலம் நாயக்கர்பட்டி பிளாக் உள்ளிட்ட 3 பிளாக்குகளின் விவரத்தை அளித்தார். அப்போது, பல்லுயிர் பகுதிகள் குறித்து தெரிவித்து இருந்தாலும், அங்கு ஏலம் விடுவதற்கு எதிராக எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை.சுரங்கத்துறை அமைச்சகம், முக்கிய தனிமங்கள் கொண்ட 24 பிளாக்குகளை ஏலம் விட்டது. 20.16 சதுர கி.மீ., நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக் ஆனது பிப்., மாதம் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் இரண்டாவது முயற்சியாக ஜூன் மாதம் ஏலத்தில் விடப்பட்டது. கடந்த நவ., மாதம் ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. முதலில் ஏலம் விடப்பட்ட பிப்., முதல் நவ., 7 வரையிலான காலகட்டத்தில் ஏலம் தொடர்பாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் நடத்திய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது. ஆனால், ஏலம் தொடர்பாக தமிழக அரசு எந்த எதிர்ப்பையோ, கவலையையோ அல்லது எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை.தனிமங்கள் உள்ள சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்படுவதற்கு முன்னர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்போது, பல்லுயிர் பகுதிகள் நீக்கப்படும். இதற்கான உரிமை தமிழக அரசிடம் உள்ளது. இது ஆய்வுக்கு பிறகே எடுக்கப்படும்.நாட்டின் பொருளாதார நலன் கருதி, ஏலத்தில் விடுவதுடன் மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் பணி நின்று விடும். இதன் பிறகு, letter of intent (LOI), வழங்குவது, லைசென்சில் கையெழுத்து போடுவது மற்றும் கூட்டு உரிமம், குத்தகைக்கு விடுவதில் மாநில அரசிடம் தான் அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் சுரங்கம் அமையும் பகுதிகளை மாற்றிக் கொள்ளலாம். இங்கு உற்பத்தி துவங்கியதும் வருமானம் மாநில அரசுக்கே சென்றடையும்.ஆனால், ஏலம் விடப்பட்ட பிறகு, சுரங்கம் அமையும் பகுதியில் பல்லுயிர் தளம் உள்ளது எனக்கூறி, இந்த ஏலத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே, சுரங்கம் அமையும் பகுதியில் உள்ள பல்லயிர் தளம் உள்ளபகுதிகள் எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து ஆய்வு செய்வது, பல்லுயிர் தளம் இல்லாத பகுதிகளில் சுரங்கம் அமையும் பிளாக்குகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என ஜிஎஸ்ஐ., கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு நாயக்கர்பட்டி டங்ஸ்டின் பிளாக்கை ஏலத்தில் எடுத்த நிறுவனத்திற்கு letter of intent வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N.Purushothaman
டிச 25, 2024 06:52

சமச்சீர் கல்வி படிச்ச திருட்டு திராவிடனுக்கு ஒரு நற்செய்தி.. தி.மு. க கூட்டணி கட்சிக்காரனுங்க எல்லாம் சேர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கணும்ன்னு போராட்டம் நடத்தி இருக்காங்க... மொத்தத்துல இவனுங்களுக்கு ஒப்பந்தம் என்றால் என்ன எடை எதிர்க்க வேண்டும் எதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற எந்த ஒரு அடிப்படை விஷயமும் தெரியாமலேயே இருக்கானுங்க ....


Priyan Vadanad
டிச 24, 2024 22:32

இங்கு கருத்து பதிவிடும் ஒருவருக்காவது அந்த பகுதியில் கால் பதிக்க இடம் இருந்திருந்தால் இப்படி கருத்து எழுத மனம் வருமா? தலை வலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.


ghee
டிச 25, 2024 06:49

அய்யா பிரியன், இதே மாநில அரசு tungsten சுரங்கம் வேண்டும் என்று போன வருடம் கேட்டது.....சிறிது பொது அறிவையும் வளருங்கள்


veera
டிச 25, 2024 06:51

உனக்கு நோகமா நுங்கு சாப்பிட ஆசையா வடை


SIVA
டிச 24, 2024 21:07

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லிட் காப்பர் தொழிற்சாலையின் இரண்டாவது யுனிட் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு இவர்கள் ஆட்சியில், இப்போதும் வேதாந்த நிறுவனத்தின் இந்த தொழிலும் முதலில் ஒன்றும் சொல்ல வில்லை இப்போது எதிர்ப்பு , நீட் மசோதா தாக்கல் , அன்று ஆதரவு இபோது எதிர்ப்பூ, கட்ச தீவு அன்று ஆதரவு இன்று எதிர்ப்பு , காவிரி தடுப்பணை அன்று ஆதரவு இன்று எதிர்ப்பு , சேலம் எட்டு வழி சாலை அன்று எதிர்ப்பு இன்று ஆதறவு , டாஸ்மாக் அன்று எதிர்ப்பு இன்று ஆதரவு , தஞ்சாவூரிலும் ஒரு திட்டத்திற்கு அனுமதி கையெழுத்து பின்னர் எதிர்ப்பு , அன்று தூத்துகுடி தூப்பாக்கி சூடு சம்பவ அதிகாரிகள் அன்று குற்றவாளி இன்று அவர்களுக்கு பத்தி உயர்வு இது தாண்ட திராவிட மாடல் ....


Bala
டிச 24, 2024 21:05

டங்ஸ்டன் உலோக தாது இந்தியாவின் பாதுகாப்பு தேவைக்கு மிகவும் தேவை. தமிழக மக்களும் அரசும் இந்த திட்டத்தை ஆதரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


Priyan Vadanad
டிச 24, 2024 22:29

சார் ஒங்க வீடு அந்த பக்கமாவா இருக்கு???


N.Purushothaman
டிச 25, 2024 07:34

மத்திய அரசு கேட்ட போது ,ஒப்பந்த உள்ளி கோரிய போது திருட்டு திராவிடனுங்க படுத்து இருந்தானுங்க போல ...


ManiK
டிச 24, 2024 20:37

மீண்டும் கொள்ளையடிக்க போட்ட பிளான் டமால் ஆகிவிட்ட வேதனையில் ஏதேதோ புலம்பும். மதுரை மக்களை நிச்சயம் வஞ்சிக்கும்.


Kannan
டிச 24, 2024 20:15

பல்லுயிர் தளம் என்றால் என்ன? இதையெல்லாம் English லும் சொன்னால் என்ன ? பல வார்த்தைகளுக்கு அர்த்தமே புரிவதில்லை.


பெரிய ராசு
டிச 24, 2024 21:13

Biodiversity ஹாட்-ஸ்பாட்...ஒரு சில உயிரினம் அந்த இடத்தில மட்டுமே வசிக்கும் , அந்த இடம் மாசுபட்டால் அந்த இனம் அழிந்து விடும் , தெந்தமிழ் நாட்டில் பாறைகளை வெட்டி எடுப்பதால் அநேக உயிரினினம் அழிந்துபட்டுவிட்டது


P.M.E.Raj
டிச 24, 2024 20:10

தமிழகத்தில் திராவிட கோமாளி கட்சிகள் ஆட்சி செய்யும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஒரு புரிதலும் இல்லாமல் மக்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளனர். திராவிட கட்சிகள் தமிழ் நாட்டின் சாபக்கேடுகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை